Published : 21 Nov 2023 06:20 AM
Last Updated : 21 Nov 2023 06:20 AM

ப்ரீமியம்
இனியும் தொடர வேண்டுமா மரண தண்டனை?

மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தை ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற நிலைக் குழு, புதிய சட்டத்தில் மரண தண்டனை சேர்க்கப்பட வேண்டுமா, கூடாதா என்பதை மத்திய அரசின் முடிவுக்கே விட்டுவிடுவதாக அறிவித்துள்ளது. இது மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா என்னும் புதிய சட்டத்துக்கான மசோதா, உள்துறை விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு விடப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களும் சட்ட வல்லுநர்களும் புதிய சட்டத்தில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளையும் விரிவான வாதங்களையும் இந்தக் குழுவிடம் முன்வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x