Published : 01 Nov 2023 06:20 AM
Last Updated : 01 Nov 2023 06:20 AM
அக்டோபர் 29 அன்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மதப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 12 வயதுச் சிறுமி உள்பட மூன்று பேர் இறந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறைச் சம்பவங்கள் எந்தப் பின்னணியிலிருந்தும் உருவெடுக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாக இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் மதப் பிரிவு நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது. 1905இல் இந்த மதப் பிரிவு இந்தியாவில் அறிமுகமானது. சி.டி.ரஸல் என்கிற அமெரிக்கர் தோற்றுவித்த இந்த மதப் பிரிவைக் கேரளத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். 1912இல் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக் காலகட்டத்தில் ரஸல் நேரடியாகத் திருவனந்தபுரத்துக்கு வந்து, மதப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். திருவிதாங்கூர் அரசும் அவருக்கு ஆதரவு நல்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT