Published : 08 Sep 2023 06:20 AM
Last Updated : 08 Sep 2023 06:20 AM
தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பேற்று மாநாட்டை நடத்தும் நிலையில், உலகின் பார்வை இந்தியா மீது குவிந்திருக்கிறது. காலநிலை மாற்றம், உக்ரைன் போர் ஆகியவற்றின் விளைவாகப் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் எனப் பல விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவிருக்கின்றன.
ஜி20 அமைப்பு இதுவரை சாதித்திருக்கும் விஷயங்கள் குறித்துப் பரவலான விமர்சனங்கள் உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் உறுப்பு நாடுகளிடம் இந்தியா முன்வைத்த பரஸ்பர சட்ட உதவி (Mutual Legal Assistance) அடிப்படையிலான 229 கோரிக்கைகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என ஊழலுக்கு எதிரான ஜி20 செயற்குழுவின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT