Published : 04 Sep 2023 06:20 AM
Last Updated : 04 Sep 2023 06:20 AM
சுயமரியாதைத் திருமணம் குறித்துத் தெளிவான பார்வையை வழங்கும் தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தான் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணை அவரது பெற்றோரின் பிடியிலிருந்து மீட்டுத் தரக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளவரசு என்பவர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது சுயமரியாதைத் திருமணத்தை அங்கீகரித்து வழக்கறிஞர் கொடுத்த திருமணச் சான்று செல்லாது என்று கூறி, ஆட்கொணர்வு மனுவைக் கடந்த மே 5 அன்று நிராகரித்துவிட்டது. 2014இல் இதே போன்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT