Published : 17 Jul 2023 06:25 AM
Last Updated : 17 Jul 2023 06:25 AM
இன்றைய டிஜிட்டல் உலகில், பயனரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, தரவுகளாகப் பராமரிப்பதன் மூலம் இணையதளங்களும் செயலிகளும் சேவை வழங்கிவருகின்றன. மக்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துப் பராமரித்து, அதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை அரசாங்கங்கள் செயல்படுத்திவருகின்றன. மறுபுறம், தகவல்-தரவுக் கசிவு, திருட்டு போன்ற இணையக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
இந்தப் பின்னணியில், ‘டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம்’ (Digital Personal Data Protection Bill) என்கிற மசோதாவை மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ளது. ஜூலை 5 அன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT