Published : 03 Jul 2023 07:37 AM
Last Updated : 03 Jul 2023 07:37 AM
கோயில் ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற எந்தச் சாதியினரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் முக்கியமான தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு, 1970இல் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியதிலிருந்தே அதற்குப் பல்வேறு தடைகள் நீடித்துவருகின்றன. இந்தச் சட்டம் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதும், அரசு சட்டப் போராட்டம் நடத்துவதுமாகவும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்தச் சூழலில் 2018இல், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்துக்கான விண்ணப்பங்களை வரவேற்று, கோயில் செயல் அலுவலர் வெளியிட்ட அறிவிக்கை விளம்பரத்தை எதிர்த்து, அக்கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT