Published : 26 Jun 2023 07:50 AM
Last Updated : 26 Jun 2023 07:50 AM
தமிழ்நாட்டில் 500 மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சமூக அளவிலும் அரசியல் களத்திலும் மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில், திமுக அரசின் இந்நடவடிக்கை ஒரு முக்கியமான நகர்வு.
தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கிவரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, 500 மதுக் கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு-ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மண்டலங்களில் இயங்கிவந்த 500 கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. குறைந்த வருவாய் கடைகள்; வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களில் அருகில் செயல்பட்டுவந்த கடைகள்; மக்களின் அதிருப்திக்கு உள்ளான கடைகள், நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, தங்கள் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை பல்வேறு பகுதி மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT