Published : 20 Jun 2023 08:08 AM
Last Updated : 20 Jun 2023 08:08 AM
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், மதுவில் சயனைடு கலந்து கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக் கூடத்தில் மது அருந்திய இருவர் இறந்தது சர்ச்சையானதை அடுத்து, அவர்கள் உட்கொண்ட மதுவில் சயனைடு கலந்திருந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். மனிதர்களைத் தாக்கப் பயன்படுத்தப்படும் அமிலத்தைப் போலவே சயனைடு பயன்பாட்டையும் தீவிரக் கண்காணிப்புக்கு உள்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் இவ்விரு நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் பிரதான சாலையில் இரும்புப் பட்டறை வைத்திருந்த பழனிகுருநாதனும் அவரிடம் பணியாற்றிய பூராசாமியும் திடீரென உயிரிழந்தனர். டாஸ்மாக்கில் வாங்கிய தரமற்ற மதுவை அருந்தியதால்தான் அவர்கள் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருந்தது தடயவியல் பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT