சுஜாதா எனும் நிரந்​தரம்

சுஜாதா எனும் நிரந்​தரம்
Updated on
2 min read

எழுத்​தாளர்​கள் மறைந்​து​விடு​வார்​கள். ஆனால் ‘மாஸ்​டர்​’கள் மறைவ​தில்​லை. மாஸ்​டர் என்ற தகு​தியை காலம் எல்​லோருக்​கும் வழங்​கி​விடு​வது​மில்​லை. காலத்​தின் பல்​வேறு கேள்வி​களுக்கு எவர் பதில் அளிக்​கிறாரோ, தான் ஈடு​பட்ட துறை​யில் அதி​கபட்ட மேதமை​யுடன்​கூடிய பங்​களிப்பை எவர் வழங்​கு​கிறாரோ அவரே மாஸ்​ட​ராக அறியப்​படு​கிறார்.

சுஜா​தாவை அவரது தீவிர​மான வாசகர்​கள் ‘வாத்​தி​யாரே’ என்று அழைப்​பது அன்​பின் மிகு​தி​யால் அல்ல, அது ஒரு காரணப்​பெயர். அவர் வாழ்​நாளெல்​லாம் கற்​றுக்​கொண்டே இருந்​தார். தமிழ்​கூறும் நல்​லுல​குக்கு நவீனத்​து​வத்​தின் பல்​வேறு பாடங்​களை அவர் கற்​பித்​து​கொண்டே இருந்​தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in