இலக்கிய நோபல் பரிசு பெற்ற பெண் படைப்பாளிகள்: ஒரு வரலாற்றுப் பார்வை

இலக்கிய நோபல் பரிசு பெற்ற பெண் படைப்பாளிகள்: ஒரு வரலாற்றுப் பார்வை
Updated on
2 min read

1901ஆம் ஆண்டு முதல் வழங்​கப்​பட்டு வரும் நோபல் பரிசு, உலகளா​விய இலக்​கியச் சாதனை​களை அங்​கீகரிக்​கும் மிக உயரிய விரு​தாகும். இது​வரையி​லான தரவு​களின்​படி, பல்​வேறு துறை​களில் மொத்​தம் 67 பெண்​கள் நோபல் பரிசு பெற்​றுள்​ளனர். இதில் இலக்​கி​யத்​துக்​காக மட்​டும் 18 பெண் படைப்​பாளி​கள் இந்த விரு​தினை வென்று சாதனை படைத்​துள்​ளனர்.

தொடக்க காலங்​களில் நோபல் தேர்​வில் ஆண்​களின் ஆதிக்​கமே மேலோங்​கி​யிருந்​தது. இருப்​பினும், 20ஆம் நூற்​றாண்​டின் இறு​திப் பகு​தியி​லிருந்து பெண் எழுத்​தாளர்​களின் பங்​களிப்பு கணிச​மாக அங்​கீகரிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​தி​யா​வைப் பொறுத்​தவரை, இது​வரை ஒரு பெண் எழுத்​தாளர் கூட இலக்​கிய நோபல் பெற​வில்லை என்​பது ஒரு குறையே. தகு​தி​யுள்ள பல தமிழ் மற்​றும் இந்​தி​யப் பெண் எழுத்​தாளர்​கள் இருந்​தும், முறை​யான மொழிபெயர்ப்​பு​கள் மற்​றும்சர்​வ​தேசப் பரிந்​துரைகள் இல்​லாததே இதற்​குக் காரண​மாக அமை​கிறது.

இலக்​கிய நோபல் வென்ற பெண் ஆளு​மை​களின் படைப்​பு​களை உற்​று​நோக்​கி​னால், அவை காலத்​துக்கேற்ப சில பொது​வான தன்​மை​களைக் கொண்​டிருப்​பதை உணர முடி​யும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in