ராமாமிர்தம், இராசேசுவரி, ராஜம் கிருஷ்ணன், சத்தியவாணி முத்து, வி.பாலம்மாள், அன்னை வீரம்மாள்

ராமாமிர்தம், இராசேசுவரி, ராஜம் கிருஷ்ணன், சத்தியவாணி முத்து, வி.பாலம்மாள், அன்னை வீரம்மாள்

கட்டுரை வெளியில் பெண்கள்

Published on

தமிழ்ச் சூழலில், பெண்​கள் கட்​டுரைகள் எழுத​வில்லை என்​னும் கருத்து ஆண்​களால் தொடர்ந்து வைக்​கப்​படு​கிறது. பெண்​ணொரு​வர் தமிழில் எழு​தி, அச்​சில் வெளி​யான முதல் உரைநடை நூல், 1862ஆம் ஆண்டு அன்னாள் சத்​தி​ய​நாதன் எழு​திய ‘நல்ல தாய்’ என்​னும் நூல். அதைத் தொடர்ந்த இந்த 164 ஆண்டு காலப் பயணம், பல பெண் உரைநடை ஆசிரியர்​களைக் கண்​டிருக்​கிறது.

வி. பாலம்​மாள் 1920களில் மதன்​மோகன் மாள​வி​யா​வின் வரலாற்றை எழு​தி​ய​வர். ‘தி​ரா​விட மதம்’ நூலை எழு​திய பண்​டிதை அலர்​மேல் மங்​கை, 1930களில் இலங்கை மலை​யகத் தோட்​டத் தொழிலா​ளர்​களின் பிரச்​சினை​களை எழு​திய கோ.ந. மீனாட்​சி​யம்​மாள் ஆகியோரின் எழுத்​துப் பணி மிக முக்​கிய​மானது. ‘திருக்​குறள் தீபாலங்​காரம்’ (1929) என்​னும் திருக்​குறள் ஜமீன்​தா​ரிணி உரை எழு​தி​ய​வர் கி.சு.​வி. இலட்​சுமி அம்​மாள். இந்​தியா விடு​தலை பெற்ற கால​கட்​டத்​தில் அறி​வியல் கட்​டுரைகளைப் படைத்​தவர் ஈ.த.இராசேசுவரி​யம்​மை​யார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in