மாண்பை மீட்குமா மனித உரிமைகள் ஆணையம்?

மாண்பை மீட்குமா மனித உரிமைகள் ஆணையம்?
Updated on
3 min read

இந்தியா பல்வேறு தளங்களில் முன்னேறுவதாகச் சொல்லப்பட்டுவரும் நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC), தரநிலை ‘A’ இலிருந்து ‘B’க்குக் குறைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு, இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்போதைய சூழல் குறித்தும் எதிர்கால நிலை குறித்தும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடும் விமர்சனங்கள்

மனித உரிமைகளைப் பாதுகாத்தல் / மேம்படுத்துதல், மனித உரிமை மீறல்களை ஆய்வுசெய்தல் விசாரணை நடத்துதல், அரசு - பொது நிர்வாகத்தைக் கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - நீதியை உறுதிசெய்தல், தேசிய, மாநில - சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து, மனித உரிமைகளின் முன்னேற்றத்துக்காகச் செயல்படுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய வேண்டிய கடமை மனித உரிமை ஆணையத்துக்கு உண்டு.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் சுதந்திரம், பன்முகத்தன்மை, செயல்திறன் ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் விளைவாக, உலகளாவிய தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (Global Alliance of National Human Rights Institutions - GANHRI) அங்கீகாரத் துணைக் குழு (Sub-Committee on Accreditation - SCA), இந்திய ஆணையத்தின் தரநிலையை ‘A’ இலிருந்து ‘B’க்குக் குறைக்கக் கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரைத்தது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனித உரிமைகள் ஆணையத்தின் முயற்சி பலனளிக்காமல், தரம் குறைக்கப்பட்ட பரிந்துரை, 4.12.2025 அன்று உறுதிசெய்யப்பட்டது. இது ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும்.

தரக்குறைப்பின் பின்னணி

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பணியில் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் (NHRIs) பின்பற்ற வேண்டிய சர்வதேச அளவுகோல்களை ‘பாரிஸ் கொள்கைகள்’ வரையறுக்கின்றன.

ஒரு நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் இந்தக் கொள்கைகளை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறது என்பதை உலகளாவிய தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரத் துணைக் குழுதான் மதிப்பீடு செய்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம், 2017ஆம் ஆண்டுவரை ‘A’ தரநிலையைக் கொண்டிருந்தது. ஆனால், 2011 முதலே ஆணையத்தின் அமைப்பு, செயல்பாடுகள், வெளிப்படைத்தன்மை குறித்துப் பல கவலைகளை எஸ்.சி.ஏ. எழுப்பிவந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in