பருப்பு, எண்ணெய்வித்துகள்: அரசின் பார்வை மாறுமா?

நீர்ப்பாசன வசதிகள் விரிவடைந்ததால் மானாவாரி விவசாயம் புறக்கணிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது
பருப்பு, எண்ணெய்வித்துகள்: அரசின் பார்வை மாறுமா?
Updated on: 
3 min read

அண்மையில், டெல்லியில் நடைபெற்ற மானாவாரி விவசாயம் பற்றிய மாநாட்டில் (Dryland Congress) உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘இந்தியாவில் நீர்ப்பாசன வசதிகள் விரிவடைந்ததால் விவசாயிகள் மானாவாரி விவசாயத்திலிருந்து விலகி வேறு பயிர்களுக்கு மாறினர்.

இதுவே பருப்பு, எண்ணெய்வித்துகள் உற்பத்தி குறைவதற்குக் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகளின் இறக்குமதிச் செலவு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி உயர்ந்துவரும் சூழலில், அமைச்சரின் இந்தக் கூற்று சரியானதா?

பரப்பளவும் உற்பத்தி நிலையும்

1970-71இல் பருப்பு வகைகளின் சாகுபடிப் பரப்பு 225.3 லட்சம் ஹெக்டேராகவும், அதன் உற்பத்தி 118.2 லட்சம் டன்னாகவும் இருந்தது. ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, 2024-25இல் பருப்பு சாகுபடிப் பரப்பு 277.2 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து, உற்பத்தி 256.8 லட்சம் டன்னாக அதிகரித்தது. இருப்பினும், பருப்புப் பயிர்களின் சராசரி மகசூல் ஹெக்டேருக்கு 524 கிலோவிலிருந்து 926 கிலோவாக இக்காலக்கட்டத்தில் உயர்ந்துள்ளது.

எண்ணெய்வித்துகளின் கதையும் ஏறக் குறைய இதே போன்றதுதான். 1970-71இல் எண்ணெய்வித்துகள் 164.9 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு, 95.4 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. 1986இல் தொடங்கப்பட்ட எண்ணெய் வித்துகளுக்கான தொழில்நுட்ப இயக்கத்தின் காரணமாக, 2024-25இல் எண்ணெய்வித்துகளின் பரப்பு 304.4 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 429.9 லட்சம் டன்னாகவும் உயர்ந்தது.

1990களின் தொடக்கத்திலிருந்து கடுகு, சோயாபீன் பயிர்களில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக எண்ணெய்வித்துகளின் உற்பத்தியில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. மறுபுறம், ஒரு காலத்தில் எண்ணெய்வித்துகளின் ராஜா என்று அழைக்கப்பட்ட நிலக்கடலையின் பரப்பளவு தொடர்ந்து குறைந்துவருகிறது.

இப்பயிர்களின் தேவையைவிட உற்பத்தி வளர்ச்சி மிகக் குறைவாக இருப்பதால், பல காலமாக இறக்குமதியைப் பெருமளவில் நாம் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பயிர்களின் வளர்ச்சி குறைவதற்குப் பசுமைப் புரட்சியே முதன்மைக் காரணம்.

1960களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி, அரசு முதலீடுகள், மானிய விலையிலான உரங்கள், மின்சாரம், பெரும் கால்வாய்ப் பாசன உள்கட்டமைப்பு வசதிகளுடன் நெல், கோதுமை ஆகிய பயிர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

Loading content, please wait...

X