சர்வதேச வணிக ஒப்பந்தங்கள்: பழைய சட்டங்கள் பயன் தருமா?

சர்வதேச வணிக ஒப்பந்தங்கள்: பழைய சட்டங்கள் பயன் தருமா?

Published on

வரலாற்றுரீதியாகக் களிமண் சுவடிகளில் தொடங்கிய வர்த்தகம், இன்று விண்ணைத் தொடும் சிலிக்கான் சிகரங்களை எட்டியுள்ளது. ‘பொருளாதார பலத்தில் அமெரிக்காவை இந்தியா முந்திவிட்டது’ என்ற எலான் மஸ்க்கின் கருத்தும், அதை வழிமொழிந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றும் உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளி ஆசியாவை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகின்றன.

இந்தச் சூழலில், இந்திய - ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஒரு புதிய பாய்ச்சலுக்கு வழிவகுத்திருக்கிறது. ஆனால், இந்த வணிகப் புரட்சிக்கு நமது 19ஆம் நூற்றாண்டுச் சட்டங்கள் எந்த அளவுக்குத் துணைபுரியும் என்பது முக்கியமான கேள்வி.

சட்டங்களும் டிஜிட்டல் யுகமும்: ஆரம்பக் காலத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் வாய்மொழியாக இருந்த வணிகம், பின்னால் பண்டமாற்று முறையைப் பின்பற்றியது. 1872இல் ஏற்படுத்தப்பட்ட இந்திய ஒப்பந்தச் சட்டமும் (ICA), 1930இல் நடைமுறைக்கு வந்த பொருள்கள் விற்பனைச் சட்டமும் (SOGA) நிலக்கரி - காகிதக் காலத்துக்காகக் கட்டமைக்கப்பட்டவை.

ஆனால், இன்று நாம் வாழ்வது மென்பொருள் சாவிகள், நிகழ்நேரத் தரவுகள், சிலிக்கான் சில்லுகள் ஆதிக்கம் செலுத்தும் எண்ணிலக்க (டிஜிட்டல்) யுகம். இந்தச் சூழலில், இதுவரை 94 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விற்பனை ஒப்பந்தங்களுக்கான ஐநா உடன்படிக்கையை (CISG) இந்தியா இன்னும் ஏற்கவில்லை என்பது ஒரு முக்கியமான சட்ட இடைவெளியாகும்.

சர்வதேச வர்த்தகத்தில் நாடுகளுக்கு இடையே உள்ள சட்ட வேறுபாடுகளைக் களைந்து, ஒரு பொதுவான சட்ட முறையை உருவாக்குவதே ஐநா ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். அதனால், சர்வதேச வர்த்தகத்தில் ஐநா உடன்படிக்கை பற்றிய அறிவு ஒரு தற்காப்புக் கவசம். இந்தியா இந்த உடன்படிக்கையை இன்னும் ஏற்கவில்லை என்பதற்காக நாம் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க முடியாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in