செம்மொழித் தமிழ் செய்யறிவுத்திறன் தமிழாக வளர்ச்சியடைவது எப்போது?

செம்மொழித் தமிழ் செய்யறிவுத்திறன் தமிழாக வளர்ச்சியடைவது எப்போது?
Updated on
3 min read

தொன்​மை, தொடர்ச்​சி, வளர்ச்சி ஆகிய மூன்று சிறப்​புப் பண்​பு​களை​யும் கொண்ட செம்​மொழித்​தமிழ் இன்று செய்​யறி​வுத்​திறனுக்​கான (Artifificial Intelligence - AI) மொழி​யாக​வும் வளர்ச்​சி​யடைய வேண்​டும். நாம் எதிர்​பா​ராத அளவுக்கு நாள்​தோறும் செய்​யறி​வுத்​திறன் துறை ஒரு உயர்ந்த கட்ட வளர்ச்​சி​யைப் பெற்று வரு​கிறது. நூற்​றுக்​கணக்​கான மனித மூளை​கள் இணைந்​து, பல மாதங்​கள் அல்​லது பல வருடங்​கள் செய்​கிற அறி​வு​சார்ந்த பணி​களைச் செய்​யறி​வுத்​திறன் ஒரு சில நிமிடங்​களில் வெற்​றிகர​மாகச் செய்து முடிக்​கிறது.

செய்​யறி​வுத்​திறனின் வெற்​றிக்கு அடிப்​படை, அதனுள் அமைந்​துள்ள மனித இயற்கை மொழிகளுக்​கான பெரு​மொழி மாதிரியே (Large Language Model – LLM) ஆகும். இது​வரை கணினி​யானது தனக்​கென்று உரு​வாக்​கப்​பட்ட நிரல் மொழிகளையே (Programming Languages) பயன்​படுத்தி வந்​தது. இந்​நிரல் மொழிகளைக் கற்ற கணினி​யியல் துறையைச் சார்ந்​தவர்​களால் மட்​டுமே கணினி​யுடன் கருத்​துப் பரி​மாற்​றம் செய்ய இயலும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in