இந்தியாவின் இரண்டு அண்டை நாடுகளில் சமீபத்தில் நேரெதிரான இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று ஆட்சியின் உச்சத்தில் இருப்பவர்களுக்குப் பெரும் பாதுகாப்பை அளிக்கும் மாற்றம். மற்றொன்று ஆட்சியின் உச்சத்தில் இருந்தவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை. இந்த இரண்டு நிகழ்வுகளுமே இந்தியாவுக்கும் சங்கடங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
அண்மையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது அந்த நாட்டின் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, ராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது.