

‘ஒவ்வொரு கிராமமும் ஒரு தொல்லியல் ஆவணக்களம்’ என்ற கருத்து, பேரரசுகளை மையமாகக் கொண்ட வரலாற்றுப் பார்வையை மறுபரிசீலனை செய்கிறது. தொடர்ச்சியான மனிதக் குடியேற்றம், பண்பாட்டு நினைவுகளைத் தாங்கிய கிராமம், உயிருள்ள பன்னடுக்கு தொல்லியல் ஆவணமாகக் கருதப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட ஆய்வுகள், நகரமயமாக்கல், எழுத்தறிவு, தொழில்நுட்பம், உற்பத்தி, புதைவழக்கங்கள், வணிக வலைப்பின்னல்கள் குறித்த புதிய புரிதல்களை வழங்கு கின்றன.