திராவிட இயல் எனும் தமிழியலை வளர்த்தெடுத்த பேராளுமை

நூற்​றாண்டு: வ.அய்​.சுப்​பிரமணி​யம் (1926-2009)
திராவிட இயல் எனும் தமிழியலை வளர்த்தெடுத்த பேராளுமை
Updated on
2 min read

வடசேரி அய்​யம்​பெரு​மாள் சுப்​பிரமணி​யம் (வ.அய்​.சு), அரபிக் கடற்​கரை​யில் தாம் உரு​வாக்​கிய திரா​விட மொழி​யியல் பள்ளி வளாகத்​தில் உறங்​கு​கிறார்.

பத்​தொன்​ப​தாம் நூற்​றாண்​டில், ஐரோப்​பியப் புத்​தொளி மரபின் தொடர்ச்​சி​யாக, நம்மை ஆட்சி புரிந்​தவர்​கள் பல நிறு​வனங்​களை உரு​வாக்​கி​னார்​கள்.

தொல்​லியல், மானுட​வியல், மொழி ஆகிய பலவற்​றுக்கு ஆய்வு நிறு​வனங்​கள் உரு​வாக்​கப்​பட்​டன. இதன் மூலம் தொல்​பழந்​தமிழ் குறித்த ஆய்​வு​கள் நடை​பெறத் தொடங்​கின. திரா​விட மொழிக் குடும்​பம் அடை​யாளப்​படுத்​தப்​பட்​டது. இதற்கு எல்​லீஸ் (1777-1819), கால்​டு​வெல் (1814-1891) முதலானோர் பங்​களிப்பு முதன்​மை​யானது. திரா​விடக் கருத்​தி​யல் என்​பது உரு​வானது. ‘இந்​தி​ய​வியல்’ பற்​றிப் பேசிய அறிஞர்​களுக்கு ‘தி​ரா​விட இயல்’ பற்​றிய அறி​முகம் கிடைத்​தது. பத்​தொன்​ப​தாம் நூற்​றாண்​டின் இடைக்​காலம் தொடங்கி இருப​தாம் நூற்​றாண்டு முழு​வதும் தமிழியல் எனும்திரா​விட இயல் வளம் பெற்​றது. இவ்​வளத்​துக்​குக் கால்​கோளிட்ட அறிஞர்​களுள் வ.அய்​.சு. முதன்​மை​யானவர். இதனைப் பல்​வேறு நிறுவன உரு​வாக்​கம் மூலம் நிகழ்த்​திக் காட்​டி​னார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in