தேடல்கள்தான் நம்மை வளர்க்கும்: வே.புருஷோத்தமன் நேர்காணல்

தேடல்கள்தான் நம்மை வளர்க்கும்: வே.புருஷோத்தமன் நேர்காணல்

Published on

சென்னை புத்​தகக் காட்​சி​யோடு 40 ஆண்டு கால தொடர்​பு, பபாசி​யோடு நீண்ட கால பயணம், பபாசி​யின் துணைத் தலை​வர் பொறுப்​பு, மதுரை சர்​வோதய இலக்​கியப் பண்​ணை​யின் நிர்​வாகி, தமிழகம் முழு​வதும் வாசிப்பு இயக்​கங்​களை முன்​னெடுத்​தல், தமிழகத்​தின் அனைத்து மாவட்ட புத்​தகக் காட்​சிகளி​லும் புத்தக விற்​பனை என புத்​தகங்​களோடு நெருங்​கிய தொடர்​புடைய​வர் வே.புருஷோத்​தமன். 49வது சென்னை புத்​தகக் காட்சி நடை​பெற்று வரும் இந்த நேரத்​தில், வாசகர்​கள் மற்​றும் வாசிப்பு பற்றி அவரிடம் உரை​யாடிய​தில் இருந்​து...

Q

காந்​திய இலக்​கியப் பண்​ணை​யின் பணி​கள் குறித்​து...

A

மதுரை ரயில்வே நிலை​யத்​தில் த.அருணாச்​சலம், சு.லோக​நாதன், சா.​பாண்​டியன் ஆகிய நிர்​வாகக் குழு​வினர் சேர்ந்து முதன்​முதலாக தொடங்​கினோம். பின்​னர் 10 நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் சேர்ந்து மேல வெளி வீதி​யில் ஆரம்​பித்​தோம். மதுரை​யில் காந்​திய, சர்​வோதய, வினோபா பாவே கருத்​துக்​களை பரப்ப நிறு​வப்​பட்ட இயக்​கம் இது. இன்று காந்​திய சிந்​தனை நூல்​கள் மட்​டுமின்​றி, பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்​கான போட்​டித் தேர்வு நூல்​கள், புத்தக விற்​பனை என இந்​நிறு​வனம் வளர்ந்​துள்​ளது. இன்று தமிழ்​நாட்டு பதிப்பு மற்​றும் புத்தக விற்​பனைத் தளத்​தில், தனக்​கென ஒரு தனித்​து​வ​மான இடத்தை காந்​திய இலக்​கியப் பண்​ணைப் பெற்​றிருக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in