ஆவணப் பதிப்பின் முன்னோடி | அஞ்சலி: சு.இராசகோபால் (1954 - 2026)

எளிய மொழிநடையில் வரலாற்றைப் பதிவுசெய்தவர்
ஆவணப் பதிப்பின் முன்னோடி | அஞ்சலி:  சு.இராசகோபால் (1954 - 2026)
Updated on
2 min read

கல்வெட்டுகள் குறித்த ஆர்வத்தை உருவாக்கவும் கல்வெட்டுகள் மூலம் வரலாற்றை அறியவும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டுவந்த கல்வெட்டு ஆய்வாளர் சு.இராசகோபாலின் மறைவு வரலாற்று ஆய்வுத் துறைக்குப் பேரிழப்பு.

சிறந்த வழிகாட்டி

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆத்தங்குடியில், 1954 மார்ச் 5இல் இராசகோபால் பிறந்தார். திருச்சி பெரியார் கல்லூரியில் முதுகலை வரலாறு பயின்றார். 1974இல் தமிழக அரசு தொல்லியல் துறை நடத்திய கல்வெட்டியல், தொல்லியல் முதுபட்டய வகுப்பில் சோ்ந்து படித்தார்.

அதே ஆண்டு, கல்வெட்டு ஆய்வாளராகப் பணியில் சோ்ந்தார். பல கல்வெட்டுத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் இவர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு உரைகளையும் உருவாக்கினார்.

எந்த ஆய்வை எழுதினாலும் அதற்கான எல்லாத் தரவுகளையும் கணக்கில் கொள்வது இராசகோபாலின் சிறப்பம்சம். தொல்லியல் துறை கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின் சிறந்த மாணவர்களை உருவாக்கிய அவர், பல மாணவர்களுக்கு வேலையும் வாங்கித் தந்தார். ‘கல்வெட்டுகளில் இடம்பெறும் அளவீடுகள்’ என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வு பேராசிரியர் ஏ.சுப்பராயுலுவின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு நூலாகவும் வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் முத்துக்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார் (1979). இக்கட்டுரை அப்போது அறிஞர்கள் பலருடைய பாராட்டுதலைப் பெற்றது.

பெருவழிக் கல்வெட்டு

தொல்லியல் துறை வெளியிட்டுவரும் ‘கல்வெட்டு காலாண்டு’ இதழில் ஏராளமான கட்டுரைகளை இராசகோபால் எழுதியிருக்கிறார். தருமபுரிக்கு அருகில் அதியமான் பெருவழி என்கிற பெருவழிக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in