

சிருஷ்டி நியதியில்
எனக்கு நான் யார்
என்று தெரியாது என்பதனால்
என் உருவம் எனக்குப் புலப்பட
என் உலகம் எது
என்று கண்டுபிடிக்க
எழுத்தை நாடுகிறேன் - நகுலன்
நவீன தமிழ் கவிதையுலகில் காலம் முன்னிறுத்துகிற படைப்பாளிகளில் டி.கண்ணனும் ஒருவர். 1964-இல் பிறந்த இவர், தொடர்ந்து சிற்றிதழ் செயல்பாட்டில் சிற்றிதழ் இயக்கத்திற்கு வலு சேர்த்தவர். இவரது கவிதைகள் மொழி, கற்பனை, படிமம் என்ற உத்திகளைத் தாண்டி வாசக மனதின் ஏகாந்த நிலையில் சொற்களால் உறவாடுபவை.