மக்கள் அறிவியல் ஆசான்

மக்கள் அறிவியல் என்பது கோட்பாடு மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என உணர்த்தியவர்
மக்கள் அறிவியல் ஆசான்
Updated on
3 min read

கேரள அறிவியல் இயக்கத்தின் முன்னோடியும் நாடறிந்த அணுசக்தி விஞ்ஞானியும் மார்க்சிய சிந்தனையாளருமான முனைவர் எம்.பி.பரமேஸ்வரன், ஆகஸ்ட் 11 ஆம் தேதி தனது 91 வயதில் காலமானார். இந்தியாவிலேயே மக்கள் அறிவியல் இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்தவர்களில் முதன்மையானவரான பரமேஸ்வரனின் மறைவு அறிவியல், இலக்கியம், சுற்றுச்சூழல், சமூகச் செயல்பாட்டு உலகுக்குப் பேரிழப்பாகும்.

கண் திறந்த கல்வி

இந்தியா​விலேயே திறன்​மிக்க அணுசக்தி ஆய்வாளர்களை உருவாக்கும் நோக்கில் ஹோமி பாபா தீட்டிய திட்டத்தின் முதல் மாணவர் குழுவில் இணைந்தவர் பரமேஸ்​வரன். அவரது மதி நுட்பத்தைக் கண்டு வியந்த அணுசக்தி நிறுவனம், மேலதிக உயர் கல்விக்காக மாஸ்கோவுக்கு அனுப்​பியது.

மாஸ்கோ​வில், தாய்மொழியில் அறிவியல் சிறந்து தழைத்து வளர்வதை​யும், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் சமமாகப் பங்குபெறும் சோஷலிச சமுதா​யத்தின் மனித வளர்ச்சி​யையும் கண்டு பரமேஸ்வரன் வியந்​தார்.

இந்த அனுபவமே, இந்தியா திரும்​பியதும் இந்திய மொழிகளில் அறிவியலை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஊட்டியது. தனது 18 ஆண்டு கால அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனப் பணியைத் துறந்து, 1975 முதல் மக்கள் இயக்கத்தில் முழுநேரச் செயல்​பாட்​டாளராக ஈடுபடத் தொடங்​கியதே அவரது வாழ்க்கையில் திருப்பு​முனை. கேரளத்​துக்குத் திரும்பிய அவர், கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத்தை (கேஎஸ்​எஸ்பி) உருவாக்கு​வதில் ஈடுபட்​டார்.

தனித்துவப் பங்கு

சிபிஎம் கட்சியின் உறுப்​பினராக இருந்த​போ​தி​லும், சுற்றுச்​சூழல் பிரச்சினை​களில் கட்சி நிலைப்​பாட்​டிலிருந்து மாறுபட்டுத் தனது துணிவான முடிவுகளை பரமேஸ்வரன் வெளிப்​படுத்​தி​னார்.

1970களில் கேரள அரசு அமைதிப் பள்ளத்​தாக்குப் பகுதியில் அமைக்கத் திட்ட​மிட்​டிருந்த நீர்மின் திட்டம் கேரளத்தின் மழைக்​காடுகளை அழித்து, அங்குள்ள உயிர்ப் பன்மைக்குப் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதை பரமேஸ்வரன் தனது அறிவியல் ஆய்வுகள் மூலம் நிருபித்​தார்.

திட்டத்​துக்கு சிபிஎம் கட்சி ஆதரவாக நின்ற​போதும், மக்கள் அறிவியல் இயக்கத்தின் தலைவரான பரமேஸ்​வரன், ‘வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பதை நியாயப்​படுத்த முடியாது’ என்று துணிச்சலாக எதிர்த்​தார். இந்தப் போராட்​டத்தின் விளைவாக நீர்மின் திட்டத்தைக் கைவிடும் நிலைக்கு கேரள அரசு தள்ளப்​பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in