

ஈரோடு தமிழன்பன் என்னும் பெயர் ஓர் ஊர்ப்பெயரோடு இணைந்த புனைபெயர் மட்டுமன்று. தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரும் கருத்தியல் மரபின், செழுமை கொண்ட ஒரு மொழி மரபின் அடையாளங்களின் கூட்டுச் சேர்க்கையாகத் திகழ்ந்த திருப்பெயர்.
தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்தியலையும், அவர் ஏற்றுப் போற்றிய பொதுவுடைமைக் கருத்தியலையும் ஒருசேரக் குறிப்பதாகவும், உலகச் செவ்வியல் மொழிகளில் முதன்மை பெற்ற தமிழ் மொழியின் ஆழ அகலங்களில் திளைத்துத் தேர்ந்த ஓர் ஒப்பற்ற உள்ளத்தைக் குறிப்பதாகவும் ஈரோடும் தமிழன்பனும் இணைந்து திகழுகின்றன.