

கோப்புப்படம்
ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மலைப்பாதைகள், வனவிலங்குகளின் ஆபத்து, போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிச் சிக்கல்கள், வறுமை எனப் பல குறைபாடுகளை எதிர்கொண்டு உயர் கல்வியில் காலெடுத்து வைக்கும் பழங்குடிக் குழந்தைகள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.
சிறப்பான முன்னெடுப்பு: ஈரோடு மாவட்டத்தில் 119 பழங்குடிக் கிராமங்கள் உள்ளன. அதில் பர்கூர் மலைப்பகுதியில் மட்டும் 36 கிராமங்கள் உள்ளன. இந்தக் கல்வியாண்டில் ஏறக்குறைய 70 மாணவர்கள், ஈரோடு, கோவை, சேலம் போன்ற நகரங்களை ஒட்டிய கல்லூரிகளில் பல்வேறு பட்டப் படிப்புகளைப் படித்துவருகின்றனர்.