​நாளைய புத்தகங்களுக்கான இன்றைய சவால்கள்

பன்னாட்டுப் பதிப்பாளர் சங்க (ஐ.பி.ஏ) சர்வதேச மாநாட்டில் பதிப்புத் துறையில் புத்தாக்க முயற்சிக்கான விருதுபெற்ற ஐலே​சா நிறுவனர் ஆழி செந்தில்நாதன்.

பன்னாட்டுப் பதிப்பாளர் சங்க (ஐ.பி.ஏ) சர்வதேச மாநாட்டில் பதிப்புத் துறையில் புத்தாக்க முயற்சிக்கான விருதுபெற்ற ஐலே​சா நிறுவனர் ஆழி செந்தில்நாதன்.

Updated on
2 min read

பன்​னாட்​டுப் பதிப்​பாளர்​கள் சங்​கத்தின் (International Publishers Association- IPA) 35வது மாநாடு கடந்த ஜூலை 5 முதல் 9 வரை மலேசி​யா​வின் கோலாலம்​பூரில் நடைபெற்றது. 130 ஆண்டு கால​மாக உலகப் பதிப்​புத்​துறை​யின் மைய அமைப்​பாக விளங்​கிவரும் ஐ.பி.ஏ. அமைப்​பானது, பதிப்​புத்​துறை​யில் சுதந்​தரத்தை உறு​தி​செய்​வதை​யும் பதிப்​புரிமை​களைக் காப்​ப​தை​யும் தன் குறிக்​கோள்​களாகக் கொண்ட அமைப்​பாகும்.

ஐ.நா. சங்​கம் போல அது ஒரு சர்​வ​தேச பிர​தி​நி​தித்​துவ அமைப்​பாகும். பல நாடு​களில் உள்ள அந்​தந்த நாட்​டின் பதிப்​பாளர்​கள் சங்​கங்​களின் பன்​னாட்டு கூட்​டமைப்பே ஐ.பி.ஏ. உலகின் மிக முக்​கிய​மான பதிப்​பாளர்​கள் அதன் தலை​மைப் பொறுப்​பு​களில் இருந்​து​ வரு​கிறார்​கள். தற்​போதை​யத் தவைவர் குவான்சா ஜபாவா ஜார்​ஜி​யா​வைச் சார்ந்த ஒரு பதிப்​பாளர்.

இந்த மாநாட்​டில் கருத்​துரிமை சார்ந்த விரு​தான ஏபிஐ பிரீ வால்ட்​டேர் விருது எகிப்து நாட்​டில் புறக்​கணிப்​புக்​குள்​ளான பதிப்​பாள​ரான யேகியா பெக்​ரிக்கு வழங்​கப்​பட்​டது. பதிப்​புத்​துறை​யில் புத்​தாக்​கம் (IPA Innovation in Publishing Award) விருது பிரிட்​டனைச் சார்ந்த ஷிம்ர் ஏஐ நிறு​வனத்​துக்​கும், இந்தி​யா​வில் சென்​னையி​லிருந்து இயங்​கும் எங்​கள் ஐலேசா (Ailaysa) நிறு​வனத்​துக்​கும் வழங்​கப்​பட்​டது. உலக மொழிகளில் பதிப்​புத்​துறையை விரி​வாக்​கம் செய்​வதற்கு ஐலேசா உதவு​கிறது.

நூல்​களோடு உரை​யாட அதன் மற்​றொரு செயலி​யான Chai Reader உதவு​கிறது. சர்​வ​தேசப் பதிப்​புத்​துறை​யில் கவுர​வ​மிக்க விருது ஒன்றை, ஐ.பி.ஏ. தலை​வர் குவான்சா ஜபா​வா​விட​மிருந்​து 500க்கும் மேற்​பட்ட உலகப் பதிப்​பாளர்​களின் முன்​னிலை​யில் பெற்​றுக்​கொண்ட அத்​தருணத்​தில், மொழிகளின் சமத்​து​வத்​துக்​கான எங்​கள் தொடர்ச்​சி​யான முன்​முயற்​சிகளில் இது​வும் ஒன்​று என்​று நான் உணர்ந்தேன்​.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in