உன்னதமான திரை அனுபவத்துக்கான திறவுகோல் | நம் வெளியீடு

உன்னதமான திரை அனுபவத்துக்கான திறவுகோல் | நம் வெளியீடு
Updated on: 
1 min read

இந்​தியா மட்​டுமின்றி உலகின் பல நாடு​களி​லுமே பெண்​களை முதன்​மைக் கதா​பாத்​திரங்​களாகக் கொண்ட திரைப்​படங்​களின் வரத்து எப்​போதுமே குறைவு​தான்.

எனினும், ஓடிடி தளங்​களில் நமக்​குக் காணக்​கிடைக்​கும் தரமான படைப்​பு​களில் வரும் பெண் கதா​பாத்​திரங்​கள் பலவும் நம்​மை​யும், நம்​மைச் சுற்​றி​யுள்ள பெண்​களை​யும் நினை​வு​கூர வைப்​ப​தில் தவறு​வ​தில்​லை. இதைத்​தான் ‘திரை தேவதைகள்’ நமக்கு முதலில் உணர்த்​துகிறது.

தமிழ், மலை​யாளம், தெலுங்​கு, கன்​னடம், இந்​தி, பெங்​காலி, மராத்தி மட்​டுமின்​றி, வெளி​நாட்டு மொழிகளி​லும் 2020க்​குப் பின் வெளிவந்​து, ஓடிடி தளங்​களில் காணக்​கிடைக்​கும் பெண் கதா​பாத்​திரங்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் 25 படைப்​பு​களை எளிய நடை​யில் அலசுகிறது இந்​தப் புத்​தகம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in