டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 5 அன்று வழக்கம்போல் தன் பணிகளில் ஊக்கமாக ஈடுபட்டார்; நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்டு டெல்லி அலிபூர் சாலையில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்றார். இரவு வெகு நேரம்வரை விழித்திருந்து ‘புத்தரும் அவரது கொள்கைகளும்’ நூலுக்கு முகவுரை எழுதினார்.
டிசம்பர் 6 அன்று காலை 6 மணிக்குப் பணியாளர் தேநீர் எடுத்துச்சென்றார். படுக்கையிலேயே அம்பேத்கர் காலமாகிவிட்டதைக் கண்டு அலறினார். அம்பேத்கரின் அறையில் புத்தரின் படங்களும் சிலைகளும் வைக்கப்பட்டன. மனைவி சவிதாதேவி உடனிருந்தார். அம்பேத்கர் மறைந்த செய்தி டெல்லியில் பரவியது.