

கடந்த 150 ஆண்டுகளில் மனித மொழிகள் பற்றிய ஆய்வு பலமுனைகளில் விரிந்து, வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. குறிப்பிட்ட மொழிகள் பற்றிய ஆய்வுகளோடு, பொதுவாக மனிதமொழி பற்றிய மொழி ஆய்வும் இன்று ஒரு மிக இன்றியமையாத துறையாக வளர்ந்து நிற்கிறது. இத்துறையே மொழியியல் (Linguistics) என அழைக்கப்படுகிறது.
இயற்கை மொழிகளும் மனித மூளையும் மனிதனின் இயற்கை மொழி அறிவுக்கு அடிப்படை மனித மூளையே. இயற்கை மொழிகள் மனித இனத்திற்கு மட்டுமே உரிய ஒன்று. வேறு எந்த உயிரினங்களுக்கும் இத்திறன் கிடையாது. இது பற்றிய ஆய்வில் மொழியியலாளர்கள் பிற துறைகளைச் சேர்ந்தவர்களுடன் – உயிரியல், மரபியல், மருத்துவம் போன்ற துறையினருடன் - இணைந்து செயல்பட்டு, மனித மொழிகள் பற்றிய பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.