நவீன உயர் கல்வி: தடம் பதித்த தமிழகம் | சென்னை 387

19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் தமிழகத்தின் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டன
நவீன உயர் கல்வி: தடம் பதித்த தமிழகம் | சென்னை 387
Updated on
3 min read

கொல்கத்தாவில் 1781இல் தொடங்கப்பட்ட முகமதியன் / மதரஸா கல்லூரியே, கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தொடங்கிய முதல் கல்வி நிறுவனம். பிறகு, 1792இல் வாராணசியில் சம்ஸ்கிருதக் கல்லூரி தொடங்கப்பட்டது.

ஏற்கெனவே இந்தியாவில் உயர் சாதி / வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துவந்தது. இந்த நிலை தொடரும் வகையிலேயே அரபி, சம்ஸ்கிருதக் கல்லூரிகளைத் தொடங்கியது கம்பெனி நிர்வாகம்.

முதல் முயற்சிகள்...

அதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலோ தென்னிந்தியாவிலோ கம்பெனி நிர்வாகம் எந்த உயர் கல்வி நிறுவனத்தையும் தொடங்கவில்லை. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1812இல் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது.

ஆனால், அது கம்பெனி நிர்வாகத்தில் சேரும் ஆங்கிலேயர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கானது. கம்பெனி நிர்வாகம் ஒருபுறம் அரபி, சம்ஸ்கிருதக் கல்லூரிகளைத் திறந்துகொண்டிருந்தபோது, இந்தியாவில் ஆங்கில வழியில் கற்கும் ஆர்வம் மக்களிடம் உருவாகி இருந்தது.

ஆனால், அதற்கு அரசிடம் இருந்து உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, கொல்கத்தாவில் ராஜாராம் மோகன் ராய் தலைமையில் சிலர் இணைந்து மக்களிடம் நிதி திரட்டி, ஆங்கில வழியில் நவீன அறிவியல் பாடங்களைப் பயிற்றுவிக்க 1817இல் வித்யாலயா கல்லூரியைத் தொடங்கினர். ஆசியாவிலேயே அறிவியலை ஆங்கில வழியில் போதிக்கத் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி இதுதான்.

1820இல் சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட தாமஸ் மன்றோ தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் மிக முக்கியமானவர். மாகாணத்தின் கல்வி நிலையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்ட அவர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரண்டு; ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒன்று என்கிற அளவில் பள்ளிக்கூடங்கள் திறக்க 1826இல் ஆணையிட்டார்; ரூ.50 ஆயிரம் நிதியையும் ஒதுக்கினார். உடனடியாக 100 பள்ளிகள்வரை தொடங்கப்பட்டன. அவருக்குப் பின் வந்த ஆளுநர்கள் இந்தத் திட்டத்தைச் சரிவர நிறைவேற்றவில்லை.

மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி

1830களில் மெக்காலேவின் அறிக்கைக்குப் பிறகு கம்பெனி நிர்வாகம் ஆங்கிலவழியில் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களைத் தொடங்க முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியும் பாம்பேவில் எல்பின்ஸ்டோன் கல்லூரியும் தொடங்கப்பட்டன. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் சென்னை மாகாணத்தில் புதிதாகக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படாதது மட்டுமல்ல, ஏற்கெனவே மன்றோ தொடங்கிய பள்ளிகளும் மூடப்பட்டன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in