தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை
Updated on
2 min read

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது. இப்​பிணைப்​பின் சான்​றாக, 1967 முதல் 2026 வரையி​லான 59 ஆண்​டு​களில் பேரறிஞர் அண்​ணா, கலைஞர் கருணாநி​தி, எம்​.ஜி.ஆர், ஜெயலலி​தா, ஜோசப் விஜய் ஆகிய ஐந்து திரை ஆளு​மை​கள் தமிழகத்​தின் முதலமைச்​சர்​களாக அரியணை ஏறி​யுள்​ளனர்.

1918இல் ஆர். நடராஜ முதலி​யாரின் ‘கீசக வதம்’ எனும் முதல் மவுனப் படம் விதை போட்​டது. 1931இல் வெளி​யான ‘காளி​தாஸ்’ பேசும்​பட​மாகப் பரிணமிக்க, சென்​னைக்கு இடம்​பெயர்ந்த தயாரிப்பு மையங்​களால் ஜெமினி போன்ற பிரம்​மாண்ட ஸ்டுடியோக்​கள் உரு​வா​யின. 1950களில் அண்​ணா​வும் கலைஞரும் சினி​மாவைச் சமூகச் சீர்​திருத்த ஆயுத​மாக்​கி, பல அரசி​யல் திருப்​பு​முனை​களை உரு​வாக்​கியதோடு எம்​.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பெரு நட்​சத்​திரங்​களை​யும் உரு​வாக்​கினர்.

1980களில் கே. பாலசந்​தர், பார​தி​ராஜா, பாலு மகேந்​திரா ஆகியோர் சினி​மாவை கிராமப்​புற எதார்த்​தத்துக்கு மீட்​டெடுத்​தனர். 1992இல் ஏ.ஆர். ரஹ்​மானின் இசைப் புரட்​சி​யும், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் ஆகியோரின் எழுச்​சி​யும் தமிழ் சினி​மா​வின் எல்​லைகளை உலகள​வுக்கு விரிவுபடுத்​தின.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in