

தமிழ்நாட்டில் உள்ள 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவதாகப் போலிக் கணக்கு காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் நடத்த அனைத்திந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் (ஏஐசிடிஇ) வழிகாட்டுதலின்படி அண்ணா பல்கலைக்கழகம் நியமிக்கும் ஆய்வுக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.