வாழ்க்கைப் பயிற்சி: திருமண உறவுகளை வலுப்படுத்தட்டும்

குடும்பங்களில் சிக்கல் குறையவும் விவாகரத்துக்காக அணிவகுத்து நிற்கும் கூட்டம் குறையவும் இது அவசியம்
வாழ்க்கைப் பயிற்சி: திருமண உறவுகளை வலுப்படுத்தட்டும்
Updated on: 
2 min read

அரசுத் துறையில் உயர் பொறுப்பில் இருந்த 60 வயது நிறைந்த நபருடன் பெண்ணியம் சார்ந்து அண்மையில் பேசிக்கொண்டிருந்தேன். பேரன் பேத்திகளை எடுத்த அவருக்கு, ஒரு பெண்ணின் உடலியலைப் பற்றிய அடிப்படையே புரியவில்லை.

அதேபோல, திருமணத்துக்குப் பத்திரிகை வைக்க வந்த ஐடி நிறுவன இளைஞரிடம் வாழ்க்கைமுறை குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு பெண்ணை அணுக வேண்டிய முறை, பெண்ணின் உணர்வுகள், உடலியல் பற்றிய அறிவு என எதுவுமே தெரியவில்லை.

அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்தார். சமூகத்தில் பல தளங்களில், பலரோடும் கலந்து பழக வாய்ப்பிருக்கும் ஆண்களுக்கே இவ்வளவுதான் புரிதல் என்றால், ஒப்பீட்டளவில் அதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ள பெண்களின் நிலை என்ன?

ஆண் - பெண் சமத்துவம் தழைக்க...

சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் தங்களது உடல் இயக்கங்களைப் பற்றியும், தங்கள் வாழ்க்கைத் துணை யின் உடல் இயக்கங்களைப் பற்றியும் நன்றாக அறிந் திருக்க வேண்டும். சமூகத்தின் பல பிரச்சினைகளுக்குக் காரணம், ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தகவல் சரியாகச் சென்று சேராததும், தவறான தகவல் சென்று சேர்வதும்தான்.

ஆண் - பெண் சேர்ந்து வாழும் சமூகத்தில் ஆண்களைப் பற்றிப் பெண்களுக்கும், பெண்களைப் பற்றி ஆண்களுக்கும் உடலியல் (physiology), உறவியல் (sexology), உளவியல் (psychology), உரிமையியல் (legal rights) அறிவு தேவை.

ஒரே வீட்டில் குடும்பமாக வாழப்போகும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்த வாழ்க்கைமுறை அடிப்படைகள் முறையான வகையில் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண் - பெண் சமத்துவம் ஏட்டளவில் இல்லாமல், அது ஒரு பண்பாடாகச் சமூகத்தில் மாற வேண்டும்.

Loading content, please wait...

X