ஒரு கோபுரத்​தின் கதை

ஒரு கோபுரத்​தின் கதை

Published on

கோபுரங்​களுக்​குக்​கூட கதை உண்டா எனக் கேட்​கலாம். எல்​லாக் கோபுரங்​களுக்​கும் கதை இருக்​குமா என்​பது தெரிய​வில்​லை. ஆனால், சில கோபுரங்​களின் கதைகள் கல்​வெட்​டு​களாகக் கண்​முன் வளர்​கின்​றன. பைஞ்​ஞீலிக் கோபுரத்​தின் கதை மூன்று கல்​வெட்​டு​களில் பதி​வாகி​யுள்​ளது.

ஒரு கோயி​லின் நுழை​வா​யிலும் அதன் மேலெழும் கட்​டு​மான​மும்​தான் கோபுரம். பலர் இறைவன் உள்ள கரு​வறைக் கட்​டு​மானத்தை கோபுரம் என அழைக்​கிறார்​கள்.

அந்த அமைப்​புக்கு விமானம் என்று பெயர். ‘திருப்​பைஞ்​ஞீலி’ என்று திரு​வுடன் இணை​யும் பைஞ்​ஞீலி கிராமம், திருச்சி மாவட்​டம், மண்​ணச்​சநல்​லூர் அரு​கே உள்​ளது. முதல் ராஜ​ராஜன் காலந்​தொட்​டுக் கல்​வெட்​டு​கள் பெற்று விளங்​கும் இக்​கோ​யில், தேவார மூவ​ரால் பாடப்​பெற்​றது. வீதி​களை​யும் சேர்த்து இக்​கோ​யில் நான்கு சுற்​றுகளைக் கொண்​டுள்​ளது. இக்​கோயி​லின் மூன்​றாம் சுற்​றில் கி.பி. 8ஆம் நூற்​றாண்​டுக் குடைவரைக் கோயில் உள்​ளது.

தென்​தமிழ்​நாட்​டிலுள்ள இரண்டே சோமாஸ்​கந்​தர் குடைவரைகளில் இது ஒன்​று. தமிழ்​நாட்​டின் சிறப்​புக்​குரிய இக்​குடைவரை​யில் மட்​டும்​தான் உமையன்னை வலப்​புற​மும் சிவபெரு​மான் இடப்​புற​மு​மாய் இடை​யில் குழந்தை முரு​க​னுடன் அமர்ந்​துள்​ளனர். வேறெந்​தக் குடைவரை​யிலும் இந்த இட, வல மாற்​றம் இல்​லை.

இந்​தச் சுற்​றின் வாயி​லாக கோபுரம் ஒன்​றமைக்​கச் சோழர் கால மக்​கள் விரும்​பினர். அதற்​கான பணி மூன்​றாம் குலோத்​துங்க சோழர் ஆட்​சி​யில் கி.பி. 13ஆம் நூற்​றாண்​டின் தொடக்​கத்​தில் நடை​பெற்​றது. திரிபுவன வீரதேவ​ராகக் கல்​வெட்​டு​கள் கொண்​டாடும் இம்​மூன்​றாம் குலோத்​துங்​கன், அப்​பெயரிலேயே கும்​பகோணம் அரு​கில் உரு​வாக்​கிய திரிபுவன வீரேசுவரம் கோயி​லின் முதற்​கோபுரம் போல​வே, பைஞ்​ஞீலி கோபுர​மும் கட்​டப்​பட்​டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in