விளையாட்டையும் தமிழ் செய்வோம்

விளையாட்டையும் தமிழ் செய்வோம்
Updated on: 
2 min read

அண்​மை​யில் ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வீரர் உஸ்​மான் க்வாஜா​வின் தன்​வரலாற்று நூல் (Sabr: Finding My Way in Cricket and Life) குறித்​தும், அதில் 2018ஆம் ஆண்டு நடை​பெற்ற தென்​ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான தொடரில் பந்​தைச் சேதப்​படுத்​திய விவ​காரம் பற்றி அவர் எழு​தி​யிருப்​பது குறித்​தும் பரபரப்​பாகப் பேசப்​பட்​டது. நூல் நவம்​பர் மாதம்​தான் வெளி​யாக​விருக்​கிறது என்​றாலும், சர்ச்​சைகள் இப்​போ​திருந்தே தொடங்​கி​விட்​டன.

இது​போன்ற செய்​தி​களைப் படிக்​கும்​போது, தமிழில் இந்த நூல் வெளிவரு​மா, விளை​யாட்டு வீரர்​களின் வரலாற்று நூல்​கள் முன்​ன​தாக தமிழில் எத்​தனை வெளி​யாகி​யிருக்​கின்றன என்பன போன்ற கேள்வி​களும் இயல்​பாகவே எழு​வதுண்​டு. கிரிக்​கெட் நம் பண்​பாட்​டின் ஓர் அங்​க​மாகவே மாறி​விட்ட சூழலில், அது குறித்த புத்​தகங்​களோ, நாட்​டின் முதன்​மை​யான கிரிக்​கெட் வீரர்​களின் வரலாற்று நூல்​களோ பரவலாக வெளி​யா​வ​தில்லை என்​பது முரணாக இருக்​கிறது.

பிரிட்​டிஷ் காலத்​திலிருந்தே இந்​தி​யா​வில் கிரிக்​கெட் விளை​யாடப்​பட்டு வந்​தா​லும், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகே கிரிக்​கெட் மோகம் பரவியது. தேசப் பக்​தி​யின் அடை​யாளங்​களில் ஒன்​றாக​வும் மாறிப் போனது. கிரிக்​கெட் நுணுக்​கங்​கள், விதி​கள், புள்​ளி​விவரங்​கள், முக்​கிய நிகழ்​வு​கள் போன்​றவை குறித்த பரந்த அறி​வு,நம் நாட்​டின் பல தரப்​பினருக்​கு, பல வகை​களில் உண்​டு.

கிரிக்​கெட் விளை​யா​டாதவர்​கள் கூட அதன் மீதுள்ள ஆர்​வத்​தால் தரவுச் சேகரங்​களாக மாறி இருப்​ப​தைப் பார்த்​திருப்​போம். எடுத்​துக்​காட்​டாக, சச்​சின் டெண்​டுல்​கர் ஒரு​முறை சென்னை வந்​திருந்​த​போது நட்​சத்​திர உணவகம் ஒன்​றின் ஊழியர், முழங்கை காப்​புறை​யால் (Elbow Guard) அவரது ஆட்​டம் தடு​மாறுகிறது என்று சொன்​னது குறித்து சச்​சினே பின்​னாட்​களில் தெரி​வித்​திருக்கிறார். அப்​படி​யான கிரிக்​கெட் தாகம் கொண்​ட​வர்​கள்நம் ஆட்​கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in