தமிழ் இலக்கியங்களில் சமூக அறம்

Updated on: 
2 min read

தமிழ் இலக்​கிய மரபில் மனித மாண்​பும் சமூக அறமும் தனித்​தனி கருத்​துகளாகப் பார்க்​கப்​படு​வ​தில்​லை. தனிமனிதரின் வாழ்​வியல் ஒழுக்​க​மும், அவர் சார்ந்​திருக்​கும் சமூகத்​தின் நலனும் ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​தவை​யாகவே தமிழ்ச் சிந்​தனை மரபு அவற்​றைக் கட்​டமைத்​துள்​ளது.

‘அறம்’ என்​பது தனிமனிதர் தனக்​குள் கடைப்​பிடிக்​கும் ஒழுக்​க​மாக மட்​டுமல்​லாமல், பிற உயிர்​களு​ட​னும் பிற மனிதர்​களு​ட​னும் அவர் கொள்ள வேண்​டிய உறவின் நெறி​யாக​வும் விளங்​கு​கிறது. இத்​தகைய அறவியல் பார்வை சங்க இலக்​கி​யத்​திலிருந்து நவீன இலக்​கி​யம் வரை தொடர்ச்​சி​யாகப் பரிணமித்து வந்​திருப்​ப​தைத் தமிழ் இலக்​கிய வரலாற்​றில் காண முடிகிறது.

கணி​யன் பூங்​குன்​ற​னாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரி​கள் தமிழ் இலக்​கி​யத்​தில் மனித மாண்​பின் மிகப் பரந்த கருத்​தி​யல் வெளிப்​பா​டாக அமை​கின்​றன. ‘எல்லா ஊர்​களும் எனது ஊர்; எல்லா மக்​களும் எனது உறவினர்’ என்ற சிந்​தனை, மனிதரை அவர் பிறந்த இடம், இனம், சமூக நிலை ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் மதிப்​பி​டா​மல், மனித இருப்​பின் அடிப்​படை​யில் அணுகு​கிறது. இன்​றைய மனித உரிமைச் சிந்​தனை, உலகக் குடிமக்கள் என்ற கருத்​து, உலகமய​மாக்​கல் போன்ற நவீனக் கருத்​தாக்​கங்​கள் உரு​வாகு​வதற்கு ஆயிரக்​கணக்​கான ஆண்​டு​களுக்கு முன்​பே, மனித உறவை எல்​லைகளைக் கடந்த நிலை​யில் சங்​கப் புல​வர் சிந்​தித்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in