புத்தகம் படிக்கப் பணம் தரும் சிங்கப்பூர்

புத்தகம் படிக்கப் பணம் தரும் சிங்கப்பூர்
Updated on
2 min read

சமூக வலை​தளங்​கள் மற்​றும் டிஜிட்​டல் சுனாமி​யால் குறைந்​து​வரும் புத்தக வாசிப்​புப் பழக்​கத்தை மீட்​டு, எழுத்து வடிவி​லான அறி​வு​சார் மரபைப் பாது​காக்க நாம் போராடிக்​கொண்​டிருக்​கிறோம். இந்த திசைவழி​யில் சிங்​கப்​பூர் சுவாரசி​ய​மான ஒரு வழியைக் காட்​டு​கிறது.

வாசிக்​கும் பழக்​கத்தை ஊக்​கு​விப்​ப​தற்​காகச் சிங்​கப்​பூர் புதிய ஐந்​தாண்டு தேசிய வாசிப்பு இயக்​கத்​தைத்தொடங்​கி​யுள்​ளது. இதில் அரசாங்க இணை​யதளத்​தில் தங்​களின் வாசிப்பு நிமிடங்​களைப் பதிவு செய்​யும் குடிமக்​களுக்​குச் சிறிய அளவி​லான பண வெகும​தி​கள் ஊக்​கத்​தொகை​யாக வழங்​கப்​படு​கின்​றன.

ஒரு சிங்​கப்​பூர் டாலரை (சு​மார் ரூ.75) சம்​பா​திக்க 50 வாசிப்பு அமர்​வு​கள் (பயிற்​சிகள்) தேவை. 15 நிமிடங்​கள் அல்​லது அதற்கு மேற்​பட்ட வாசிப்பு அமர்​வுக்கு வாசகர்​கள் 20 மெய்​நிகர் நாண​யங்​களை (virtual coins) ஈட்​டு​வர். ஒரு டாலர் பணத்​தைப் பெற வாசகர்​கள் 1,000 நாண​யங்​களைச் சேகரிக்க வேண்​டும். ஒரு நாளைக்கு ஒரு வாசிப்பு அமர்வை மட்​டுமே பதிவு செய்ய முடி​யும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in