சாழல் விளையாட்டு

சாழல் விளையாட்டு
Updated on: 
2 min read

எட்​டாம் திரு​முறையைச் சேர்ந்த மாணிக்​க​வாசகரின் திரு​வாசகம், அக்​கால மகளிர் பாடி​யும் ஆடி​யும் மகிழ்ந்த தெள்​ளேணம், அம்​மானை, பூவல்​லி, சாழல் முதலிய பல விளை​யாட்​டு​களைப் பின்​பற்​றிப் பாடல்​களைக் கொண்​டுள்​ளது. அவற்​றுள், திருச்​சாழலை வரிக் கூத்​துகளுள் ஒன்​றென விளக்​கும் அடி​யார்க்கு நல்​லார், ‘தோள்​வீச்சு நற்​சாழல்’ என்​ப​தால், தோளை அசைத்​தாடும் விளை​யாட்​டாக இது கருதப்​படு​கிறது.

திருச்​சாழல் 20 பாடல்​களால் ஆனது. ஒவ்​வொரு பாடலும் இரு பகு​தி​களைக் கொண்​டது. சொல் விளை​யாட்​டாக அமைந்த இப்​பாடல்​களின் முதல் பகு​தி​யாக ஒரு​வர் இறைவனின் தோற்​றம் அல்​லது செயல்​களை இகழ்ச்​சிக் குறிப்​புடன் எதிர்​மறை​யாகப் பாட, எதிரில் இருப்​பவர் இரண்​டாம் பகு​தி​யாக அந்த இகழ்வை நேர்​செய்து இறைவனின் பெரு​மையை உணர்த்​து​மாறு அவற்​றின் பின்​னணியை விளக்​கு​வார். ஓர் எடுத்​துக்​காட்​டால் சாழல் என்​றழைக்​கப்​படும் இப்​பாடல் விளை​யாட்​டைப் புரிந்​து​கொள்​ளலாம்.

“சிவபெரு​மானின் இருப்​பிடம் சுடு​காடு; அவர் ஆடையோ கொல்​லப்​பட்ட புலி​யின் தோல்; தாய் தந்​தையற்ற தனியர் அவர்” என்று ஒரு பெண் இறைவனின் இருப்​பிடம், ஆடை, அவரது பிறப்​பற்றத் தன்மை குறித்து இகழ்ந்து பாடு​வார். மற்​றொரு பெண், அதற்கு மறுமொழி​யாக, “அவர் எங்​கிருந்​தால் என்ன, எது உடுத்​தி​னால் என்ன, தனியர்​தான் என்​றாலும் என்ன, அவர் சினந்​தால் உலக​னைத்​தும் பொடி​யாகும்; நீ அறி​யாயோ?” என்று இறைவனின் சிறப்பை உகந்து பாடு​வார். ஒவ்​வொரு பாடலும் இது​போல இகழும் புகழு​மாக இறைப்​பெரு​மை​களை வெளிப்​படுத்​தும்​போது தோள்​வீச்சு இயல்​பாகவே இரண்​டுக்​கும் பொருந்தி விளை​யாட்டை உணர்​வுமய​மாக்​கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in