ஃபிடல் காஸ்ட்ரோ: கல்வியின் அறவியல் ஆற்றல்

ஃபிடல் காஸ்ட்ரோ: கல்வியின் அறவியல் ஆற்றல்
Updated on
3 min read

இந்த ஆண்டின் தொடக்கத்துடன் வெற்றிகரமான கியூபப் புரட்சியின் 67 ஆண்டுகள் நிறைவடை கின்றன. அப்புரட்சிக்குத் தலைமை வகித்த ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டில் தான் நடக்கவிருக்கிறது.

கியூபாவில் புரட்சிகர அரசு தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் அது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் முற்றுகைகளையும் எதிர்கொண்டு வருகிறது. பல வகையான பொருளாதார, ராணுவ உதவிகளை வழங்கிவந்த சோவியத் ஒன்றியம் தகர்ந்தவுடன் கியூப மக்கள் அனுபவித்து வந்த துன்பங்களை எடுத்துரைக்க இக்கட்டுரை போதுமானது அல்ல.

சவால்களும் சாதனைகளும்: அந்​தத் துயர ஆண்​டு​களில் (1990களில்) கியூப மக்​களின் அடிப்​படைத் தேவை​களை நிறை​வேற்ற, அந்​நாட்டு அரசாங்​கம் தன் சோசலிசக் கொள்​கை​களைச் சற்​றுத் தளர்த்த வேண்​டிய கட்​டா​யத்​துக்கு உள்​ளானது. வெளி​நாட்​டிலிருந்து வரும் சுற்​றுலாப் பயணி​களிட​மிருந்​தும் ஸ்பெ​யின் நாட்​டுடன் ஏற்​படுத்​திக்​கொண்ட உறவிலிருந்​தும் அந்​நியச் செலா​வணி கிடைத்​த​போ​தி​லும் இரு வித​மான சந்தைகள் உரு​வா​யின.

ஒன்​று, சுற்​றுலாப் பயணி​களுக்​கும் வெளி​நாட்டு வணி​கர்​களுக்​கும் அவர்​களின் உள்​நாட்​டுத் தரகர்​களுக்​கும் தேவை​யான பொருள்​களை​யும் வசதி​களை​யும் பெறு​வதற்​குத் தேவை​யான அமெரிக்க டாலர்​களைப் பயன்​படுத்​தும் சந்​தை; இன்​னொன்று கியூபக் குடிமக்​கள் தங்​கள் நாட்டு நாண​யத்​தைப் பயன்​படுத்​துகின்ற, ஆனால் பெரிதும் காலி​யாக இருந்த கடைகளைக் கொண்ட சந்​தை.

இன்​றியமை​யாத பொருள்​களின் பற்​றாக்​குறை​யும் இரு​வித​மான சந்​தை​களின் செயல்​பாடு​களும் மக்​களிடையே பெரும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யிருந்​தா​லும், புரட்​சிகர அரசைத் தூக்கியெறிய அமெரிக்கா மேற்​கொண்ட பரப்புரைகள், ராணுவ - உளவுத் துறைச் செயல்​பாடு​கள் ஆகியவற்றுக்கு அந்த நாட்​டின் மிகப் பெரும்​பான்​மை​யான மக்​களிட​மிருந்து எவ்​வித ஆதர​வும் கிடைக்​க​வில்​லை.

பின்​னர் ரஷ்​யா, சீனா ஆகிய நாடு​களு​ட​னான வணி​க​மும் கியூபா​வில் எரிசக்​தித் தேவையை நிறைவு செய்​வதற்​காக வெனிசுலா வழங்​கிவந்த எண்​ணெ​ய்யும் கியூப மக்​களுக்கு ஆறு​தலாக இருந்​தன. கடும் சோதனை​கள் நிறைந்த காலக்கட்டத்​தி​லும் கியூப மருத்​துவ ஆராய்ச்​சித் துறை மிகப் பெரும் வளர்ச்​சி​யை​யும் மேம்​பாட்​டை​யும் கண்டது; உயி​ரியல், வேதி​யியல், நானோ தொழில்​நுட்​பம் ஆகிய​வற்​றில் பெரும் முன்​னேற்​றமடைந்து கொடிய நோய்​களைக் குணப்​படுத்​துகின்ற மருந்​துகளை உற்​பத்தி செய்​தது; கரோனா பெருந்​தொற்று பரவிய காலத்​தில், அதைத் தடுக்​கும் ஊசி மருந்​துகளைக் கண்​டு​பிடித்து அவற்​றைத் தன் மக்​களுக்கு மட்​டுமன்றி பல்​வேறு நாடு​களுக்​கும் வழங்​கியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in