வழக்குகளின் தேக்கம்: சீர்திருத்தம் அவசியம்

வழக்குகள் உருவாகாத நிர்வாகத்தை உருவாக்குவதே ஆரோக்கியமான வளர்ச்சி
வழக்குகளின் தேக்கம்: சீர்திருத்தம் அவசியம்
Updated on: 
3 min read

இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்ற வழக்குகளின் எண்ணிக்கை 5.90 கோடியை எட்டியிருப்பதாகச் சொல்கின்றன தேசிய நீதித் துறைத் தரவுக் கட்டமைப்பின் (National Judicial Data Grid – NJDG) தரவுகள்.

நீதிமன்றங்களில் வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பது மிக முக்கியமான பிரச்சினை. சில வழக்குகள் பல தசாப்தங்களாக நிலுவையில் இருப்பது பெரும் விவாதத்துக்கு உரியது.

அதிகரிக்கும் சுமை

நம் நாட்டில் பதிவான மொத்த வழக்குகளில் அரசாங்கத்தின் பங்கு மட்டுமே ஏறத்தாழ 50% என்று முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவிக்கிறார். பிரச்சினைகள் தொடங்கும்போதே அவற்றைப் பொறுப்புடன் கையாண்டிருந்தால் வழக்குகள் குறைந்திருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

செயல்திறனற்ற அதிகாரிகளே இதற்கு மூலக்காரணம் என்பது அவரது குற்றச்சாட்டு. நீதிமன்றத் தீர்ப்புகள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்படுவதால் அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஏற்கெனவே பெரும் சுமையைச் சுமந்துகொண்டிருக்கும் நீதித் துறையின் பணிச்சுமை, அவமதிப்பு வழக்குகளால் மேலும் அதிகரிக்கிறது என்று நீதிபதி ரமணா தெரிவிக்கிறார்.

அறியாமையும் அலட்சியமும்

ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை மேலதிகாரிகளின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உண்டு. இது பற்றிய ஆழமான தெளிவுரைகளை நீதிபதி ஜெகன் மோகன் ரெட்டி (1965) பதிவு செய்துள்ளார்.

பாட்னா நீதிமன்றத்தில் ஒரு நிகழ்வு. தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறிய மாவட்ட ஆட்சியர் ஒருவரிடம் நீதிபதி பி.பி.பஞ்சந்த்ரி, “நீதிமன்றத் தீர்ப்பு, அரசாணை - இவற்றில் எது மேலானது?” என்று வினவினார்.

சற்றுத் தடுமாற்றத்துடன், “நீதிமன்றத் தீர்ப்புதான் மேலானது” என்று அந்த ஆட்சியர் பதிலளித்தார். அப்படியானால், “தீர்ப்பை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?” என்கிற அடுத்த கேள்விக்கு, “அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்” என்று அந்த ஆட்சியர் முரண்பாடாகப் பதிலளித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது என்பது சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் கடமை. ஓர் அதிகாரியின் அறியாமை நிர்வாகக் குறையாக இருக்கலாம்; ஆனால், அறிந்திருந்தும் கடமையைத் தவிர்ப்பது ஆபத்தானது.

Loading content, please wait...

X