தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு மரபணு மாற்றப்பட்ட பருத்தியைப் பெரும் ஆரவாரத்துடன் அனுமதித்துப் பருத்தி விவசாயிகளின் இடுபொருள் செலவை உயர்த்தியது மட்டுமன்றி, பருத்தி இறக்குமதி மீதான வரியையும் நீக்கியுள்ளது மத்திய அரசு. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பெரிதும் அச்சுறுத்துகிறது.
வளர்ந்த நாடுகள் தம் விவசாயிகளுக்குக் கணிசமான அளவில் மானியம் அளிக்கின்றன. பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் நமது குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைந்த விலையில் இந்தியாவுக்குப் பருத்தியை ஏற்றுமதி செய்கின்றன. இவை யாவும் மரபணு மாற்றப்பட்ட பருத்தியே. இதனால் சூழல் மட்டுமன்றி நம் உள்நாட்டுப் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.