ஆட்டிச சிகிச்சையில் ஒரு நம்பிக்கைக் கீற்று

ஆட்டிச சிகிச்சையில் ஒரு நம்பிக்கைக் கீற்று
Updated on
3 min read

சென்னையைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் அவர். அவரின் பதின்ம வயது மகள் ஆட்டிசத்தின் தாக்கத்துக்கு உட்பட்டவர். எங்கு சென்றாலும் முழுமையான, நம்பத்தகுந்த சிகிச்சை அவருக்குக் கிட்டவில்லை. இந்தச் சூழலில்தான், ஆட்டிசத்துக்கான ஒப்புயர்வு மையம் (Centre of Excellence for Persons with Autism) அறிமுகமானது. நீண்ட அலைச்சலுக்குப் பிறகு, சரியானதொரு இடத்துக்குத் தாங்கள் வந்திருப்பதாக இக்குடும்பத்தினர் தற்போது உணர்கின்றனர்.

ஆட்டிச நிலை கொண்டவர்களுக்கு மனநல மருத்துவம், வாழ்க்கைத் திறன் சிகிச்சை, செவித்திறன் - பேச்சுத்திறன் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை போன்ற பல்வேறு சேவைகள் தேவைப்படும். அனைத்தும் ஒரே இடத்தில் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சென்னை கே.கே. நகர் ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள தமிழக அரசு புனர்வாழ்வு வளாகத்தில் இயங்கும் இம்மையம், அண்மையில் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

பல அடிகள் முன்னே: வாழ்நாள் முழுதும் தொடரக்கூடிய நரம்புவளர்ச்சி சார்ந்த ஒரு நிலை ஆட்டிசம். இது ஒருவரது தகவல்தொடர்புத் திறன், நடத்தை ஆகியவற்றைப் பாதிக்கும். ஆட்டிசத்துக்கு மூலச் சொல்லான ‘ஆட்டோ’, ஒருவர் தனக்குள்ளேயே மூழ்கி, பிறருடன் தொடர்புகொள்ள இயலாத நிலையைக் குறிக்கிறது.

அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது, பேசுபவரின் முகத்தைப் பார்க்காமலே இருப்பது, ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வது போன்றவை இதன் அறிகுறிகள். ஆட்டிசத்துக்கான திட்டவட்டமான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

ஆட்டிசம் தொடர்பான பல தவறான கருத்துகளிலிருந்து பெற்றோர் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நிலை. ஆனால், இதை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையைச் சில தனியார் ஆலோசகர்கள் அளிக்கின்றனர். தீர்வுக்காக ஏங்கும் பெற்றோர், இவர்களிடம் சென்று ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in