காவல் நிலைய வாசற்படி: ஆற்றுப்படுத்துமா, அச்சமூட்டுமா?

பாதிக்கப்படும் குழந்தைகளின் புகார்கள் உரிய முறையில் செவிமடுக்கப்பட வேண்டும்
காவல் நிலைய வாசற்படி: ஆற்றுப்படுத்துமா, அச்சமூட்டுமா?
Updated on: 
3 min read

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெம் வீரமணி தொடர்பான தகவல்கள், குழந்தைகள் பாதுகாப்பில் காவல் துறையின் கடமை என்ன என்பது குறித்த முக்கியமான விவாதத்தைப் பொதுவெளியில் ஏற்படுத்தியுள்ளன.

ஒரு குழந்தையின் உலகில், சீருடை அணிந்த காவலர் இரண்டு விதமான முகங்களைக் கொண்டிருக்க முடியும். அவர் அச்சுறுத்தும் அதிகாரத்தின் முகமாகவும் இருக்கலாம்; பாதுகாப்பளிக்கும் மனிதரின் முகமாகவும் இருக்கலாம். எது நிஜமாகிறது என்பது, அந்தக் குழந்தையை அவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதில்தான் இருக்கிறது.

குழந்தைநேயப் பாதுகாப்பு

ஒரு குழந்தை முதன்முறையாகக் காவல் நிலையத்தின் வாசற்படியில் நிற்கும் தருணத்தை நினைத்துப் பாருங்கள். அது கடக்கும் வாசல் வெறும் கட்டிடத்தின் வாசல் அல்ல. சட்டம் என்கிற மிகப்பெரிய அமைப்பு அந்தக் குழந்தையிடம் முதன்முறையாகப் பேசும் வாசல்.

அங்கே அது கேட்கும் முதல் குரல், பார்க்கும் முதல் முகம், எதிர்கொள்ளும் முதல் அணுகுமுறை ஆகியவை நீதி அமைப்பின் மீது அதன் வாழ்நாள் நம்பிக்கையை உருவாக்கக்கூடும்; அதேபோல், நம்பிக்கையைச் சிதைக்கவும் முடியும்.

எனவே, குழந்தையை அணுகும் காவலரின் குரலுக்கும் நடத்தைக்கும் பின்னால் ஒரு சட்டப் பொறுப்பும் மனிதநேயக் கடமையும் இருக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பையும், சட்டத்தின் கீழ் உரிய நீதியையும், மறுவாழ்வையும் உறுதிசெய்வதற்காகக் குழந்தைகள் நலக் காவல் அலுவலர் (சிடபிள்யூபிஓ), சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு (எஸ்ஜேபியூ) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இளஞ்சிறார் நீதிச் சட்டம் - 2015, குழந்தைகளைக் கையாள்வதில் காவல் துறைக்குச் சிறப்பான பொறுப்புகளை வழங்குகிறது.

குழந்தையிடம் விசாரணை நடத்தும் முறையிலேயே சட்டம் பல பாதுகாப்புகளை வலியுறுத்துகிறது. குழந்தையை அச்சுறுத்தாத சூழலை உருவாக்குதல், தேவையற்ற வகையில் குற்றம்சாட்டப்பட்டவரை எதிர்கொள்ளச் செய்யாமல் இருப்பது, நடந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வற்புறுத்தாமல் தவிர்ப்பது, இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் குழந்தையைத் தங்கவைக்காதிருத்தல் போன்றவை அதன் அடிப்படை நோக்கங்கள். ஆனால், சட்டத்தில் உள்ள இந்தப் பாதுகாப்புகள் நடைமுறையில் எவ்வளவு உறுதியாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in