வெறும் தரவுகள் மட்டும் போதுமா?

மருத்துவ ஆய்வுகளில் வெளிப்படும் கண்டறிதல்கள் நிதிநிலை அறிக்கையிலும் பிரதிபலிக்க வேண்டும்
வெறும் தரவுகள் மட்டும் போதுமா?
Updated on
3 min read

இந்தியாவில் சுகாதாரத் துறை குறித்த கணக்கெடுப்புகள் அரசுத் துறைகளாலும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களாலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

ஆனால், இந்த ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தும் உண்மைகளுக்கும் அவற்றை அரசுகள் மக்களிடம் எடுத்துரைக்கும் முறைக்கும் இடையே கணிசமான இடைவெளி இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மருத்துவக் கணக்கெடுப்பின் நோக்கம் ஏற்கெனவே அறிந்துள்ள தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்துவது அல்ல. மாறாக, சுகாதார அமைப்பில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்யத் தேவையான கொள்கை - நிர்வாக மாற்றங்களுக்கு வழிகாட்டுவதே. ஆனால், நடைமுறையில் அப்படி நிகழ்கிறதா?

மூன்று முக்கிய அறிக்கைகள்

அறிக்கைகள் வெளியாகின்றன; சாதகமான அம்சங்களை மட்டுமே அரசுகள் முன்னிலைப்படுத்துகின்றன; ஊடகங்கள் புள்ளிவிவரங்களைத் தலைப்புச் செய்திகளாக மாற்றுகின்றன; ஆய்வாளர்கள் மூலத் தரவுகள் வெளிவரக் காத்திருக்கின்றனர்; தொழில் - வணிக நிறுவனங்கள் புதிய சந்தை வாய்ப்புகளை மதிப்பிடத் தொடங்குகின்றன.

ஆனால், அந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை மாற்றங்களோ நிர்வாக நடவடிக்கைகளோ அரிதாகவே உருவாகின்றன. இதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட மூன்று முக்கிய அறிக்கைகளே சிறந்த எடுத்துக்காட்டுகள்.

6ஆவது தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வு (NFHS-6), தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) 80ஆவது சுற்றுக் குடும்பச் சுகாதாரச் செலவின ஆய்வு, 2022–23ஆம் ஆண்டுக்கான தேசியச் சுகாதாரக் கணக்கீட்டு மதிப்பீடுகள் ஆகிய மூன்றும், இந்தியாவின் சுகாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

ஆனால், சுகாதாரச் செலவுகள் தொடர்பான இரண்டு அறிக்கைகள் பொதுவெளியில் போதிய கவனத்தைப் பெறவில்லை. அதிகம் பேசப்பட்ட 6ஆவது தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வுகூடப் புதிய சிந்தனையை உருவாக்குவதற்குப் பதிலாக, நாம் ஏற்கெனவே அறிந்த பிரச்சினைகளையே மீண்டும் உறுதிப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஒரு நாட்டின் சுகாதார முன்னேற்றங்கள் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவைதான். ஆனால், மருத்துவ ஆய்வின் உண்மையான மதிப்பு வெற்றிகளைப் பதிவுசெய்வதில் இல்லை; எந்தத் திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை, எந்தத் துறைகள் இன்னும் பின்தங்கியுள்ளன என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுவதில்தான் இருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in