தரவுகளால் தேசத்தை வடிவமைத்தவர்

புள்ளியியலை மனித வாழ்வை மேம்படுத்தும் கருவியாகவே கருதியவர் மகலானோபிஸ்
தரவுகளால் தேசத்தை வடிவமைத்தவர்
Updated on
3 min read

இந்தியா 1947ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது, புதிய தேசத்தின் முன் முக்கியமான ஒரு சவால் இருந்தது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் என்ன? எத்தனை பேர் வேலைவாய்ப்பில் உள்ளனர்? வறுமை எவ்வளவு பரவலாக உள்ளது? மக்களின் வருமானம், நுகர்வு, கல்வி, சுகாதார நிலைமை போன்றவை எப்படி இருக்கின்றன? இத்தகைய அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட நம்பகமான தரவுகள் குறைவாக இருந்தன.

ஒரு நாட்டின் வளர்ச்சியைத் திட்டமிட வேண்டுமானால், முதலில் அந்த நாட்டின் உண்மை நிலையை அறிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை அறிவியல் முறையில் அளவிட்டுப் புரிந்து கொள்வதற்கான வழியை இந்தியாவுக்குக் காட்டியவர் இந்தியப் புள்ளியியலின் தந்தை பி.சி.மகலானோபிஸ்.

திருப்புமுனையை நிகழ்த்தியவர்

கொல்கத்தாவில் 1893 ஜூன் 29 அன்று பிறந்த மகலானோபிஸ், இயற்பியல் கற்றவர். ஆனால், புள்ளியியல் அறிவியலின் சமூகப் பயன்பாட்டை உணர்ந்த அவர், இந்தியாவில் புள்ளியியல் துறையை ஒரு புதிய உயரத்துக்குக் கொண்டுசென்றார். ஒரு நாட்டின் முன்னேற்றம் கருத்துகளாலும் அனுமானங்களாலும் அல்ல, தரவுகளாலும் ஆதாரங்களாலும் வழிநடத்தப்பட வேண்டும் என்கிற எண்ணமே அவரது வாழ்க்கைப் பணியின் அடித்தளமாக அமைந்தது.

இந்தக் கனவின் வெளிப்பாடாக 1931ஆம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute – ISI) நிறுவப்பட்டது. அப்போது கல்வி சார்ந்த முயற்சியாகத் தொடங்கிய இந்த நிறுவனம், பின்னர் உலகின் முன்னணி புள்ளியியல் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக வளர்ந்தது.

புள்ளியியல், பொருளாதாரம், கணிதம், சமூக அறிவியல், திட்டமிடல் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் ஆற்றிய பங்களிப்பு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. விடுதலைக்குப் பிறகு, நாட்டின் சமூக - பொருளாதார நிலைமைகளை அறிவியல் அடிப்படையில் அறிய வேண்டிய அவசியம் அதிகரித்தது.

இதன் விளைவாக, 1950ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு (National Sample Survey – NSS) தொடங்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல், நுகர்வு, வேலைவாய்ப்பு, கல்வி, சமூக நிலைமைகள் குறித்து முறையான தகவல்களைச் சேகரிக்கும் தேசிய அமைப்பாக அது உருவானது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in