

இந்தியாவில், அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்களைப் பற்றி விவாதம் எழுந்திருக்கிறது. ‘தொழிலாளர் நலச் சட்டச் சீர்திருத்தம்’ என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் உண்மையில் தொழிலாளர்களின் நலனை உறுதிசெய்கின்றனவா அல்லது அவர்களின் உரிமைகளைச் சுருக்குகின்றனவா என்கிற கேள்வி முக்கியமான அரசியல்–சமூக விவாதமாக மாறியுள்ளது.
புதிய சட்டங்கள்: 1991ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழில் துறை, நிதி, வர்த்தகம், பொதுத் துறை போன்ற பல துறைகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது நீண்ட காலம் ஒத்திவைக்கப்பட்டது. 2019 முதல் இந்த மாற்றங்கள் சட்ட வடிவம் பெற்றன. 2020இல் பல்வேறு திருத்தங்களுடன் புதிய தொழிலாளர் சட்ட விதிகள் நிறைவேற்றப்பட்டு, 2025–26க்குப் பின்னர் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன.