இந்தியத் தனியார் விண்வெளிப் பயணத்தின் புதிய அத்தியாயம்

விக்ரம்-1 சிறு செயற்கைக்கோள் ஏவுதலுக்கான உலகளாவிய சந்தையில் புரட்சி செய்யும்
இந்தியத் தனியார் விண்வெளிப் பயணத்தின் புதிய அத்தியாயம்
Updated on
3 min read

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியிருக்கிறது. ஹைதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்ட ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், தனது முதல் சுற்றுப்பாதை ஏவூர்தியான ‘விக்ரம்-1’-ஐ ஏவியிருக்கிறது. இந்த முதல் பயணத்துக்குப் பெயர் ‘ஆகமன்-1’ (Aagaman-1).

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) கட்டமைப்பு ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு, சோதிக்கப்பட்ட இந்த ஏவூர்தி, நான்கு விண்பொதிகளை (Payloads) சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும்.

இஸ்ரோ, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு - அங்கீகார மையம் (IN-SPACe) ஆகியவற்றின் சீர்திருத்தங்கள் மூலம், வணிக விண்வெளித் துறையைக் கட்டமைக்கும் இந்திய முயற்சியின் அடுத்த கட்ட நகர்வு இது.

பிரத்யேக ஏவூர்தி

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் பெயரைத் தாங்கி நிற்கும் ‘விக்ரம்-1’, ஸ்கைரூட் நிறுவனத்தின் முதல் சுற்றுப்பாதை ஏவூர்தி. முன்னாள் இஸ்ரோ பொறியாளர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், விண்வெளித் துறையைத் தனியார் பங்கேற்புக்கு இந்தியா திறந்த பின்னர் உருவான ஏறக்குறைய 400 விண்வெளிப் புத்தாக்க நிறுவனங்களில் ஒன்று.

‘விக்ரம்-1’, சிறு செயற்கைக்கோள்களைத் தாழ் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் ஏவூர்திகளுடன் ஒப்பிடுகையில் இது சிறியதாகத் தோன்றினாலும், ஒரு குறிப்பிட்ட வகை வாடிக்கையாளருக்கு வழங்கும் வகையிலான துல்லியமான, பிரத்யேக சேவை; வணிக விண்வெளிச் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

உலகெங்கும் புவிக் கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலைக் கண்காணிப்பு, அறிவியல் ஆராய்ச்சி - தொழில்நுட்ப விளக்கங்களுக்காக கியூப்சாட் செயற்கைக்கோள்கள் (CubeSats), சிறு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவருகிறது.

இத்தகைய சிறு செயற்கைக்கோள்களை இயக்கும் நிறுவனங்கள், பெரிய ஏவூர்தியில் மற்றவற்றுடன் ‘துணைப் பயணி’யாக இடம்பிடிப்பதைவிடத் தங்களுக்கென ஒரு பிரத்தியேக ஏவூர்தி மூலம், நேரடியாகத் தேவையான சுற்றுப்பாதையில் தங்கள் செயற்கைக்கோளை நிலைநிறுத்தவே விரும்புகின்றன. இதற்கு ஏற்ப ‘விக்ரம்-1’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in