தேசியத் தகுதித் தேர்வும் மொழி அரசியலும்

தேசியத் தகுதித் தேர்வும் மொழி அரசியலும்
Updated on
3 min read

அண்மைக் காலமாக, தேசியத் தகுதித் தேர்வு (NET - National Eligibility Test) நடத்தப்படும் முறையாலும், ஆய்வு உதவித்தொகை வழங்கப்படுவதில் நிலவும் குழப்பங்களாலும் பலர் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர். இதில் மொழி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அடுத்​தடுத்த மாற்றங்கள்: இந்தியாவில் கற்பித்தல் பணி, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒரு சீரான தரத்தை (uniform standard) நிர்ண​யிப்​ப​தற்காக 1989-1990ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசால் அறிமுகப்​படுத்​தப்பட்ட தேர்வுதான் தேசியத் தகுதித் தேர்வு. கல்லூரியில் பணியாற்று​வதற்கும் அரசுப் பணி பெறுவதற்கும் இந்தத் தேர்வு கட்டாய​மாக்​கப்​பட்​டு உள்ளது. 1989 முதல் 2014 வரை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இத்தேர்வை நடத்திவந்தது.

2014 முதல் 2018 வரை இத்தேர்வை நடத்தும் பொறுப்பை இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஏற்றுக்​கொண்டது. இவ்வமைப்பு தேர்வு முறையில் சில மாற்றங்​களைச் செய்தது. தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் தேர்வில் துல்லி​யத்​ தன்​மையைக் கொண்டு​வரவும் மூன்று தாள்களும் கொள்குறி வகையில் ஓஎம்ஆர் தாளில் நடத்தப்​பட்டன. 2018 முதல் இத்தேர்வை நடத்தும் பொறுப்பைத் தேசியத் தேர்வுகள் முகமை​யிடம் (National testing agency) ஒப்படைத்தது மத்திய அரசு.

இந்த அமைப்பும் நெட் தேர்வில் முக்கியமான மாற்றங்​களைக் கொண்டு​வந்தது; மூன்று தாள்களாக இருந்த தேர்வை இரண்டு தாள்களாக மாற்றியது. பொதுத்தாள் 100 மதிப்​பெண்; இரண்டாம் தாள் 200 மதிப்​பெண். இரண்டு தாள்களும் ஒரே நேரத்தில் கணினி அடிப்​படையில் (Computer Based Test) நடத்தப்​பட்டு, தேர்வு எழுதிய ஒரு மாதத்​துக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்​கப்​பட்டன.

ஒட்டுமொத்தமாக இத்தேர்​வுக்கான பாடத்​திட்​டத்தையும் தேசியத் தேர்வுகள் முகமை மாற்றியமைத்தது. தேர்ச்சி விகிதமும் ஒரே சீரான தன்மையில் மாற்றியமைக்​கப்​பட்டது. அதாவது, குறிப்​பிட்ட ஒரு பாடத்​துக்குத் தேர்வு எழுதுபவர்​களின் எண்ணிக்கையில் 6% பேர் மட்டுமே உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி​யுடைய​வர்கள் என அறிவிக்​கப்​படும். இதில் இடஒதுக்​கீட்டுக் கொள்கைகள் முறையாகப் பின்பற்​றப்​படும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in