செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) கலைஞர்களும் | நான் வரைந்த கோடுகள் 1

செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) கலைஞர்களும் | நான் வரைந்த கோடுகள் 1
Updated on: 
2 min read

அமெரிக்​கா​வி​லிருந்து வெளிவரும் ‘How’ என்ற காண்​பியல் கலைஞர்​களுக்​கான இரு​மாத இதழின் பிரதி ஒன்றை 1988இன் தொடக்​கத்​தில் படித்​தேன். பி.சி. (PC), ஆப்​பிள் ஆகிய​வற்​றுக்கு முந்​தைய Amiga கம்ப்​யூட்​டரை ஓர் ஓவியர் எப்​படிப் பயன்​படுத்து​கிறார் என்​பதை விளக்​கப் படங்​களு​டன் விவரித்​திருக்​கும் விரிவான கட்​டுரை அதில் இடம்​பெற்​றிருந்​தது. அதுவே என்​னைத் தூக்​கமில்​லாமல் தொடர்ந்து தேடுவதற்​குத் தூண்​டியது என்று நம்​பு​கிறேன்.

சிறு​வயதில் ஓவியம் தீட்​டு​கிற ஆர்​வம் எனது தந்​தையாரால் ஊக்​கு​விக்​கப்​பட்​டதுடன், அந்த வயதிலேயே வால்ட் டிஸ்னி படங்​களை​யும், பிர​மாண்​ட​மான ஹாலிவுட் சரித்​திரப் படங்​களை​யும் தொடர்ந்து பார்க்​கவும், படங்​கள் நிறைந்த புத்​தகங்​கள் சுற்றியிருக்கும் படி​யான சூழலும் எங்​களுக்​குக் கிடைத்​தது. அத​னால் வீட்​டுக்​குத் தெரியாமல், எட்​டாம் வகுப்பு படிக்​கும்​போது சேர்த்து வைத்த காசில் Box camera வாங்​கி​விட்​டேன்.

அப்​போது எனக்கு வால்ட் டிஸ்னிதான் ஆதர்​சம். ஓவியக் கல்​லூரி​யில் சேர்ந்த பின் எனது பார்வை விரிவடைந்​தா​லும், Animation (உயிரோவியம்) மீதான காதலும் தேடுதலும் நிற்​க​வில்லை. Art of Animation குறித்து நான் மட்​டுமே கல்​லூரி​யில் பேசிக்​கொண்டு திரிவேன். அது சார்​பான புத்​தகங்​களை மூர் மார்க்​கெட்​டில் தேடி அலை​வேன். அதன் பின் திரைப்​படத்​துறை - விளம்​பரத்​துறை - திரைப்​படக் கல்​லூரி நண்​பர்​களு​டன் அனிமேஷனைத் தொடர்ந்து கற்​றும் முயன்​றும் வந்​த​ போது​தான் மேற்குறிப்பிட்ட கட்​டுரையைப் படித்​தேன்.

Loading content, please wait...

X