செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) கலைஞர்களும் | நான் வரைந்த கோடுகள் 03

செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) கலைஞர்களும் | நான் வரைந்த கோடுகள் 03
Updated on: 
2 min read

ஆச்​சரிய​மான ஒரு மாற்​றம் இருக்​கப் போகிறது என்றே நம்​பு​கிறேன். கோவிட் பெருந்​தொற்​றின்​போது வெளி​யில் எங்​கும் செல்ல முடி​யாது என்​ப​துடன், வீட்​டில் குழந்​தைகளை எப்​படிச் சமாளிப்​பது என்ற நிலை வரும்​போது அவர்​கள் வீட்​டுக்​குள்​ளேயே படம் வரைய​வும் படிக்​கவும் பெற்​றோர் உதவினர். பலரும், குறிப்​பாக நண்​பர்​கள் தங்​கள் குழந்​தைகளின் ஓவியங்​களை எனக்​குக் காண்​பித்து மகிழ்ந்​தனர். அவை பெரும்​பாலும் ஜப்​பானிய Manga படங்​களில் இருந்து வரையப்​பட்​டவை.

ஏனெனில், அவர்​களுக்கு மாதி​ரியாகக் கிடைக்க வேண்​டிய காண்​பியல் கல்​வியை நாம் அளிக்​காததால், செல்ஃபோன் மூலமும், இணை​யம் வழி​யாகவும் உல​கம் முழு​வதும் பர​விக்​கிடக்​கிற இந்த ஓவியங்​களைப் பார்த்​தவுடன் அவற்​றைக் குழந்​தைகள் விரும்​பிப் பிரதி எடுப்​ப​தும் அதுசார்ந்து படிப்​ப​தும் நிகழ்ந்​திருக்​கிறது. கூடவே இவை அவர்​கள் இது​வரை பார்க்​காத, வெளி​யில் கிடைக்​காத படிமங்​கள் என்​ப​தையும் புரிந்​து​கொள்ள வேண்​டும்.

1990களில் நான் தனித்​துத் தேடி அடைந்த Manga சித்​திரங்​களும் அதன் நேர்த்​தி​யும் என்னை ஈர்த்​தன. அதன் தாக்​கம் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்​குள் வேக​மாகப் பர​வியது. அந்த நாடுகளின் முக்​கிய கலைஞர்​கள் அதைக் கொண்​டாடி வளர்த்​தனர்.

பிறகு 2003 வாக்​கில் புலம்​பெயர்ந்த தமிழ்க் குழந்​தைகளின் கல்​வியை மேம்​படுத்த பேராசி​ரியர் சிவத்​தம்​பி​யின் வழிகாட்​டுதலின்​படி புத்​தகங்​களை வடிவ​மைக்​கும் குழு​வுடன் இயங்​கியபோது, ஐரோப்​பியக் குழந்​தைகள் அங்கு உள்ள புத்​தகக் கடைகளில் கூட்​ட​மாக வந்து Manga காமிக்ஸ்களைத் தீவிர​மாகப் படிப்​ப​தையும், வாங்​கிச் செல்​வதையும் கண்​டேன்.

Loading content, please wait...

X