செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) கலைஞர்களும் | நான் வரைந்த கோடுகள் 02

செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) கலைஞர்களும் | நான் வரைந்த கோடுகள் 02
Updated on: 
2 min read

உறைந்த ஓவியமும், அசையும் ஓவியமும் (Film) வேறு வேறு அல்ல. ஓவியத்​தைப் படிக்​கப் பயின்​றவர்​கள், புகைப்​படத்​தையும் சினிமாவையும் சரியாகப் படிக்க முடியும். கோடு, வெளி, வடிவம், ஒளி​நிழல், வண்​ணம் இவற்​றுடன் அசைவையும் படிப்​பது அடுத்​த நிலை.

கற்​கால ஓவியனே தனது ஓவியங்​களில் அசைவையும் பதிவு செய்​திருக்​கிறான். அது தொடர்ந்து பல நாகரி​கங்​களில் வெளிப்​பட்டு இன்​றும் சாட்​சி​யாக இருக்​கிறது; தொடர் சித்​திரங்​களாகவும் பரிணமித்து தனிக்​கலை​யான காமிக்ஸ் வடிவ​மும் பெற்​றது. உறைந்த ஓவியத்​தி​லிருந்து கருத்தை, கதையைச் சொல்ல தொடர் சித்​திரங்​களைப் பயன்​படுத்​திய கலைதான் காமிக்ஸ். இது அச்சு ஊடகம் கண்​டு​பி​டிக்​கப்​பட்டு, பின் நாளிதழ்​களாக வளர்ந்​த​போது, உடன் வளர்ந்த தனித்த கலை​ வடிவ​மாக ஆனது.

இதைத் தொடர்ந்து புகைப்​படம் கண்​டு​பி​டிக்​கப்​பட்​ட​வுடன் அதையும் ஓவியர்​கள் இணைத்​துக்​கொண்​டார்​கள். உல​கெங்​கும் சென்று ஓவியம் வழி பதிவு செய்​ததன் நீட்​சி​யாக புகைப்​படங்​களும் இன்று எல்​லோருக்கும் காணக் கிடைக்​கின்றன. அசைவைப் பதிவு செய்​யும் வழியைக் கண்​ட​வுடன் சினிமாவும் பிறந்​தது.

உள்​ளதை உள்​ளபடி ஒரு சித்​திரத்​தில் வரைந்​ததன் அடுத்​தகட்​ட​மாக, தொடர் சித்​திரங்​களாக நாளிதழில் வரைய முடிந்த இக்​கலைஞர்​களே, சினிமா கண்​டு​பி​டிக்​கப்​பட்​ட​வுடன், தங்​கள் தகுதி​யின் வழி முதல் அனிமேஷன் (Animation) முயற்​சிகளைச் செய்து வெற்​றி​பெற்​றார்​கள்.

அசைவையும் தொடர்ந்து கற்​றவர், கற்​கிறவர்​களே காமிக்ஸ் கலைக்​குள் இருக்க முடியும். அதுபோல தீவிர அர்ப்​பணிப்​போடு இயங்க முடிந்த கலைஞர்​களே இதில் தொடர்ந்து நீடிக்க முடியும்.

Loading content, please wait...

X